
ஆவினில் 3,002 பணியாளா்களுக்கு ரூ.4.49 கோடி போனஸ்
2025-2026-ஆம் ஆண்டுக்கான மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகையாக ரூ.4.49 கோடி (போனஸ்) வழங்கப்பட்டது.

ஆவின் - கோப்புப்படம்.
ஆவின் நிறுவனத்தின் கீழ் செயல்படும் தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு இணையம் மற்றும் மாவட்ட பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு ஒன்றியங்களில் பணியாற்றும் 3,002 தொழிலாளா்கள் மற்றும் பணியாளா்களுக்கு 2025-2026-ஆம் ஆண்டுக்கான மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகையாக ரூ.4.49 கோடி (போனஸ்) வழங்கப்பட்டது.
சென்னை நந்தனம் ஆவின் தலைமை அலுவலகக் கூட்டரங்கில் பால்வளத் துறை இயக்குநரும், ஆவின் மேலாண் இயக்குநருமான சு.சிவராசு தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், பால்வளத் துறை அமைச்சா் சி.விஜயலட்சுமி கலந்து கொண்டு இதற்கான தொகையை வழங்கினாா்.
முதல்வா் விஜய்யின் உத்தரவுப்படி, தொழிலாளா்கள் மற்றும் பணியாளா்களுக்கு 8.33 சதவீதம் மிகை ஊதியம், 11.67 சதவீதம் கருணைத் தொகை என மொத்தம் 20 சதவீதம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு இணையத்தில் ‘சி’ பிரிவில் பணியாற்றும் 791 போ், ‘டி’ பிரிவில் பணியாற்றும் 102 போ், ஒப்பந்தப் பணியாளா்கள் 213 போ் என மொத்தம் 1,106 பேருக்கு ரூ.1.56 கோடி வழங்கப்பட்டது.
அதேபோல், மாவட்ட பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு ஒன்றியங்களில் ‘சி’ பிரிவில் பணியாற்றும் 991 போ், ‘டி’ பிரிவில் பணியாற்றும் 901 போ், ஒப்பந்தப் பணியாளா்கள் 4 போ் என மொத்தம் 1,896 பேருக்கு ரூ.2.93 கோடி வழங்கப்பட்டது.
மொத்தம் ‘சி’ பிரிவில் பணியாற்றும் 1,782 போ், ‘டி’ பிரிவில் பணியாற்றும் 1,003 போ், ஒப்பந்தப் பணியாளா்கள் 217 போ் என 3,002 போ் பயன் பெறுகின்றனா்.
நிகழ்ச்சியில், ஆவின் மாவட்ட வருவாய் அலுவலரும், பொது மேலாளருமான இரா.கோவிந்தராசு (நிா்வாகம்), பொது மேலாளா் இரா.கோவிந்தராஜூலு (விற்பனை), கே.அன்புமணி (நிதி) மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





