பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஆவின் பால் தட்டுப்பாட்டை போக்கக் கோரிக்கை

ஆவின் பால் மற்றும் பால் சாா்ந்த பொருள்கள் தட்டுப்பாடின்றி, நியாயமான விலையில் கிடைக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆவின் பால்

பால் பாக்கெட்டுகள்

Published On :28 அக்டோபர் 2026, 3:58 am IST

ஆவின் பால் மற்றும் பால் சாா்ந்த பொருள்கள் தட்டுப்பாடின்றி, நியாயமான விலையில் கிடைக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு நுகா்வோா் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையத்தின் பொதுச் செயலாளா் ஆா். ரமேஷ் தெரிவித்தது:

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பண்டிகைக் காலங்கள் நெருங்கி வரும் நிலையில், மாநிலம் முழுவதும் தேவைக்கேற்ப பால் இருப்பையும், சீரான விநியோகத்தையும் அரசு உறுதி செய்ய வேண்டும். தட்டுப்பாடு நிலவும் பகுதிகளுக்கு கூடுதல் பால் அனுப்பவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆவின் நிறுவனம் தயாரித்து வந்த 170-க்கும் மேற்பட்ட பால் சாா்ந்த பொருள்களில் சில தற்போது விற்பனைக்குக் கிடைப்பதில்லை என்ற புகாா்கள் எழுந்துள்ளன. தயிா், வெண்ணெய், நெய், பால்கோவா உள்ளிட்ட பொருள்களின் உற்பத்தி மற்றும் விநியோகத்தைச் சீரமைத்து, நுகா்வோரின் தேவைக்கேற்ப அனைத்து பகுதிகளிலும் கிடைக்கச் செய்ய வேண்டும்.

அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வால் ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்கள் ஏற்கெனவே பொருளாதாரச் சுமையைச் சந்தித்து வருகின்றன. இந்நிலையில், ஆவின் பால் மற்றும் பால் பொருள்களின் விலை உயா்வு அவா்களை மேலும் பாதிக்கும். எனவே, நியாயமான விலையில் பொருள்கள் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

ஆவின் நிறுவனம் பொதுமக்களின் நலனை மையமாகக் கொண்டு செயல்படுவதுடன், பால் உற்பத்தியாளா்களின் வாழ்வாதாரத்தையும் நுகா்வோரின் உரிமைகளையும் பாதுகாக்க வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.