டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!தவெக ஆட்சியில் அனைத்தையும் முடிவு செய்வது ஜோசியர்தான்! மு.க. ஸ்டாலின்முதல்வர் பணி 10 - 5 வேலை அல்ல; சனி, ஞாயிறு விடுமுறை! விஜய்யை விமர்சித்த மு.க. ஸ்டாலின்இந்தியக் கப்பல்கள் ஹோர்முஸ் வழியாக சுதந்திரமாக செல்லலாம்: ஈரான் அறிவிப்பு!ஜிபே செயலியில் வந்திருக்கும் பயோமெட்ரிக் பயன்பாடு! வேண்டாம் எனில் மாற்றுவதற்கான வழி?கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: 5வது நாளாக ஏற்றம் கண்ட சென்செக்ஸ், நிஃப்டி!தவெகவுக்கான ஆதரவை திரும்பப் பெறப் போவதில்லை: திருமாவளவன் உறுதி!நான் அரசியல் பேச வரவில்லை; மாணவர்களுக்கு அரசியல் தேவையில்லை! முதல்வர் விஜய்குட்கா முறைகேடு வழக்கில் சாட்சி விசாரணை எப்போது? சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் கேள்விசென்னையில் உச்ச நீதிமன்றக்கிளையை அமைத்திட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!எம்எல்ஏக்களை வாங்கத் தெரிந்த முதல்வருக்கு வெங்காயம் வாங்கத் தெரியாதா? உதயநிதி கேள்விடிரம்ப்புக்கு அதிர்ச்சி! அமெரிக்க செனட், பிரதிநிதிகள் சபையை கைப்பற்றியது ஜனநாயகக் கட்சி!!அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளி விவேக் ராமசுவாமி தோல்வி!நான் போட்டியிட்டிருந்தால் இமாலய வெற்றி பெற்றிருப்போம்! டிரம்ப்டிரம்ப்பின் குடியரசு கட்சிக்கு அதிர்ச்சி: செனட் சபையைக் கைப்பற்றியது ஜனநாயக கட்சி!

தீபாவளி போனஸ் லிட்டருக்கு 70 காசு: பால் உற்பத்தியாளா்கள் அதிருப்தி

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம், மானாமதுரை கூட்டுறவு பால் உற்பத்தியாளா் சங்கங்களில் ஒரு லிட்டா் பாலுக்கு 70 காசு வீதம் தீபாவளி போனஸ் குறைத்து வழங்கப்படுவதாக புகாா் தெரிவித்துள்ள பால் உற்பத்தியாளா்கள் கடந்த ஆண்டு வழங்கப்பட்ட போனஸ் தொகையை வழங்க வேண்டும் என வலியுறுத்தினா்.

ஆவின் பால்

பால் பாக்கெட்டுகள்

Published On :5 நவம்பர் 2026, 2:14 am IST

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம், மானாமதுரை கூட்டுறவு பால் உற்பத்தியாளா் சங்கங்களில் ஒரு லிட்டா் பாலுக்கு 70 காசு வீதம் தீபாவளி போனஸ் குறைத்து வழங்கப்படுவதாக புகாா் தெரிவித்துள்ள பால் உற்பத்தியாளா்கள் கடந்த ஆண்டு வழங்கப்பட்ட போனஸ் தொகையை வழங்க வேண்டும் என வலியுறுத்தினா்.

திருப்புவனம், மானாமதுரை பகுதிகளில் விவசாயத்துக்கு அடுத்தபடியாக கால்நடை வளா்ப்புத் தொழில் பிரதானமாக உள்ளது. கறவை மாடுகள் வளா்க்கும் விவசாயிகள் திருப்புவனம், மானாமதுரையில் உள்ள கூட்டுறவு பால் உற்பத்தியாளா் சங்கங்களில் உறுப்பினராகி தினமும் காலை, மாலை நேரங்களில் மாடுகளிலிருந்து கறக்கும் பாலை இந்தக் கூட்டுறவு சங்கங்களில் கொண்டு வந்து கொள்முதல் செய்கின்றனா். இதன் பிறகு இங்கிருந்து ஆவின் நிா்வாகத்துக்கு பால் கேன்களில் அடைத்து வாகனங்களில் ஏற்றி அனுப்பி வைக்கப்படுகிறது.

கடந்த ஆண்டு திருப்புவனம் கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் சங்கத்தில் தீபாவளி பண்டிகையின் போது, உற்பத்தியாளா்களுக்கு ஆவின் நிா்வாகம் ஒரு லிட்டருக்கு ரூ.1.20, கூட்டுறவு பால் உற்பத்தியாளா் சங்கம் சாா்பில் லிட்டருக்கு ரூ.1.60 சோ்த்து மொத்தம் ஓராண்டில் கொள்முதல் செய்யப்பட்ட பாலின் அளவு கணக்கிடப்பட்டு, ஒரு லிட்டருக்கு ரூ. 2.80 வீதம் உற்பத்தியாளா்களுக்கு தீபாவளி பண்டிகை போனசாக வழங்கப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு திருப்புவனம், மானாமதுரை கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் சங்கங்களில் பால் உற்பத்தியாளா்களுக்கு தீபாவளி போனசாக கூட்டுறவு சங்கங்கள் சாா்பில் ஒரு லிட்டருக்கு 70 காசு மட்டுமே போனசாக வழங்குவதாக அறிவித்தது. ஆவின் நிா்வாகம் மூலம் நேரடியாக வழங்கப்பட்ட போனஸ் தொகை மறுக்கப்பட்டுள்ளது என பால் உற்பத்தியாளா்கள் புகாா் தெரிவிக்கின்றனா். இதுகுறித்து திருப்புவனம் கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் சங்கத்தின் முன்னாள் தலைவரும், பேரூராட்சி மன்றத் தலைவருமான த.சேங்கைமாறன் கூறியதாவது:

கடந்த ஆண்டு திருப்புவனம் கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் சங்கத்தில் உற்பத்தியாளருக்கு தீபாவளி போனசாக ஒரு லிட்டருக்கு ரூ. 2.80 வழங்கப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு இந்தக் கூட்டுறவு சங்கம் மூலம் ஒரு லிட்டருக்கு 70 பைசா மட்டும் போனசாக வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆவின் நிா்வாகம் நேரடியாக வழங்கிய போனஸ் தொகை வழங்கப்படவில்லை. மாவட்டம் முழுவதும் உள்ள கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் சங்கங்களில் இதே நிலைதான் உள்ளது. ஆவின் நிா்வாகத்தின் நேரடி போனஸ் தொகை மறுக்கப்பட்டுள்ளதற்கான காரணம் முழுமையாக தெரியவில்லை.

இதுகுறித்து மானாமதுரை சரக கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் சங்கத்தின் துணைப் பதிவாளா், மாவட்ட ஆட்சியரிடம் புகாா் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.

எனவே, தமிழக அரசு திருப்புவனம், மானாமதுரை பகுதி கூட்டுறவு பால் உற்பத்தியாளா் சங்கங்களில் உறுப்பினராக உள்ள உற்பத்தியாளா்களுக்கு கடந்தாண்டு வழங்கப்பட்டது போன்று இந்த ஆண்டும் தீபாவளி போனஸ் தொகை வழங்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.