
தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!
முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை விநியோகம்...

முதல்வர் ஜோசப் விஜய் - IANS
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, முதியோர் ஓய்வூதியம் பெறும் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலைகள் விநியோகிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
“தமிழ்நாடு அரசு, ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முதியோர் ஓய்வூதியம் பெறும் பயனாளிகளுக்கு விலையில்லா வேட்டி, சேலைகளை நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, தீபாவளி 2026 பண்டிகைக்கான வேட்டி, சேலைகள் கொள்முதல் செய்யப்பட்டு, தற்போது மாநிலம் முழுவதும் உள்ள நியாய விலைக் கடைகளுக்கு நகர்வு செய்யப்பட்டு இன்று (03.11.2026) முதல் வழங்கப்படுகிறது.
முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்ப அட்டைதாரர்கள், 07.11.2026-க்குள் தங்களது நியாய விலைக் கடைகளில் விலையில்லா வேட்டி, சேலைகளைப் பெற்றுக்கொள்ளலாம். பயனாளிகள் தங்களது குடும்ப அட்டையுடன் நேரில் சென்று பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இத்திட்டம் எவ்வித தாமதமுமின்றி செயல்படுத்தப்படுவதை உறுதி செய்ய, கூட்டுறவுத் துறை அலுவலர்கள் நியாய விலைக் கடைகளுக்கான நகர்வு மற்றும் விநியோகப் பணிகளை தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Summary
Diwali: Free dhotis and sarees for old-age pension beneficiaries starting today
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





