பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தீபாவளி திருநாள்! ரூ.200-க்கு 10 மளிகைப் பொருள் தொகுப்பு! இன்று முதல் விற்பனை

தமிழ்நாட்டில் தீபாவளி மளிகை பொருள் தொகுப்பு தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாக வாய்ப்பு...

grocery

மளிகைப் பொருள்கள் - பிரதிப் படம்

Published On :30 அக்டோபர் 2026, 7:31 am IST

கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மூலம் ரூ. 200-க்கு10 வகையான சிறப்பு மளிகைத் தொகுப்பு இன்று (அக். 30) விற்பனை செய்யப்படவுள்ளது.

தமிழ்நாட்டில் அரிசி விலை, மளிகைப் பொருள்களின் விலை உயர்வு மக்களை கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது. பண்டிகை காலத்தில் கட்டுக்கடங்காத விலை உயர்வால் தவெக அரசை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் வழக்கமாக பொங்கல் பண்டிகையின்போது வழங்கப்படும் பரிசுத் தொகுப்பை போன்று, இந்தாண்டு தீபாவளிக்கும் தமிழக அரசு வழங்கவுள்ளது.

இதன்படி, 10 மளிகைப் பொருள்கள் அடங்கிய ஒருங்கிணைந்த “சிறப்பு மளிகைத் தொகுப்பு”, ஒரு தொகுப்பு ரூ. 200 என்ற விலையில், மாநகராட்சிகள் அல்லாத பகுதிகளில் செயல்படும் கூட்டுறவு மொத்த விற்பனைப் பண்டகசாலைகள், தொடக்கக் கூட்டுறவுப் பண்டகசாலைகள் மற்றும் கூட்டுறவு விற்பனைச் சங்கங்களின் 128 விற்பனை நிலையங்கள் மூலம் நுகர்வோருக்கு விற்பனை செய்ய கூட்டுறவுத் துறையால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த மளிகைத் தொகுப்பில் கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, உளுந்தம் பருப்பு, மிளகாய், தனியா, பூண்டு, புளி, கடுகு, சீரகம், சோம்பு என 1.4 கிலோ எடையுள்ள பொருள்கள் இருக்கும்.

தமிழ்நாட்டில் கிட்டத்திட்ட 2.29 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் உள்ள நிலையில், அவர்களுக்கு ரூ. 200 மதிப்பிலான மளிகைப் பொருள் தொகுப்பு வழங்கப்பட்டால் அரசுக்கு ரூ. 458 கோடி செலவாகும்.

இதேபோல், புதுச்சேரியில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ரூ. 700 மதிப்பிலான மளிகைப் பொருள்கள் வழங்கப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

Summary

Diwali: A bundle of 10 grocery items for Rs. 200 goes on sale starting today

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.