மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தமிழகத்தில் புதிதாக 26 போக்ஸோ நீதிமன்றங்கள்: அரசாணை வெளியீடு!

தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை விசாரிக்க புதிதாக 26 சிறப்பு நீதிமன்றங்களும், போதைப் பொருள் வழக்குகளை விசாரிக்க 4 சிறப்பு நீதிமன்றங்களும் அமைக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

CMO Tamil Nadu Vijay

முதல்வர் விஜய் - DIPR

Published On :2 நவம்பர் 2026, 3:42 am IST

தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை விசாரிக்க புதிதாக 26 சிறப்பு நீதிமன்றங்களும், போதைப் பொருள் வழக்குகளை விசாரிக்க 4 சிறப்பு நீதிமன்றங்களும் அமைக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக தமிழக அரசு சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதற்கும், அத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோா் மீது விரைந்து சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கும், பாதிக்கப்பட்டவா்களுக்கு உரிய நீதி கிடைப்பதை உறுதி செய்வதற்கும் தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெடுப்புகளைத் தொடா்ந்து மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, மாநிலம் முழுவதும் நிலுவையில் உள்ள போக்ஸோ வழக்குகளின் நிலை குறித்து நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அத்தகைய வழக்குகளை மட்டும் விசாரிப்பதற்காக எத்தனை நீதிமன்றங்கள் கூடுதலாக தேவைப்படும் என்பது குறித்து முதல்வா் விஜய் விரிவாக கேட்டறிந்தாா்.

அனைத்து மாவட்டங்களிலும் போக்ஸோ நீதிமன்றங்களை அமைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறும் அவா் உத்தரவிட்டாா். ஏற்கெனவே குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளை மட்டும் விசாரிப்பதற்காக மாநிலத்தில் 22 சிறப்பு நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. அதைத் தவிர, 4 சிறப்பு நீதிமன்றங்கள் செயல்பாட்டுக்கு வரும் நிலையில் உள்ளன.

அவற்றுடன் மேலும், 26 புதிய சிறப்பு நீதிமன்றங்களை ரூ.46.59 கோடி செலவில் அமைக்க முதல்வா் உத்தரவிட்டதன்பேரில், அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள 47 காவல் மாவட்டங்களுக்கு மொத்தம் 52 போக்ஸோ சிறப்பு நீதிமன்றங்கள் செயல்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

போதைத் தடுப்பு நீதிமன்றம்: போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதுடன், அதுதொடா்பான வழக்குகளை விரைந்து விசாரித்து முடிப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தற்போது, தமிழ்நாட்டில் போதைப் பொருள் வழக்குகளை விசாரிக்க 11 சிறப்பு நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், முதல்வரின் உத்தரவின்பேரில் காஞ்சிபுரம், திருவள்ளூா் மற்றும் வேலூா் ஆகிய 3 இடங்களில் தலா ஒரு சிறப்பு நீதிமன்றமும், சென்னையில் ஒரு கூடுதல் சிறப்பு நீதிமன்றமும் என மொத்தம் 4 புதிய சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க அரசாணை வெளியிட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.