மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பெண்கள், குழந்தைகள் குற்றங்களை விசாரிக்க 26 கூடுதல் நீதிமன்றங்கள்: இந்தியக் கம்யூனிஸ்ட் வரவேற்பு

தமிழ்நாடு அரசு பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன் செயல்களை தடுக்க தொடர்ந்து முயற்சித்து வருகிறது என இந்தியக் கம்யூனிஸ்ட் கூறியிருப்பது....

Tamil Nadu CPI welcomed govt setting up 26 new courts ...

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் - டிஎன்எஸ்

Published On :2 நவம்பர் 2026, 1:32 pm IST

தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை விசாரிக்க புதிதாக 26 சிறப்பு நீதிமன்றங்களும், போதைப் பொருள் வழக்குகளை விசாரிக்க 4 சிறப்பு நீதிமன்றங்களும் அமைக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்றுள்ளது.

இதுகுறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளதாவது:

தமிழ்நாடு அரசு பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன் செயல்களை தடுக்க தொடர்ந்து முயற்சித்து வருகிறது. ஆரம்பத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை அமைக்கப்பட்டது. தற்போது குழந்தைகள் பெண்கள் மீதான பாலியல் வன்செயல்கள் தடுப்பது குறித்து தீவிர ஆய்வு செய்து, இது தொடர்பான வழக்குகளை விசாரிக்க தற்போது 22 நீதிமன்றங்கள் செயல்பட்டு வரும் நிலையில், மேலும் 12 சிறப்பு நீதிமன்றங்கள், 14 கூடுதல் சிறப்பு நீதிமன்றங்கள் என புதிதாக 26 நீதிமன்றங்கள் அமைக்க முதல்வர் உத்தரவிட்டிருப்பதை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி வரவேற்கிறது.

இதன் மூலம் நீதிமன்றங்களின் விசாரணையில் இருந்து வரும் 18 ஆயிரத்து 733 வழக்குகள் மீது விரைந்து நீதி வழங்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதேபோல் போதை பொருள் கடத்தல் உள்ளிட்ட வழக்குகளை விசாரிக்க சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் ஆகிய நான்கு மையங்களில் சிறப்பு நீதிமன்றங்கள் அமைப்பதும் நல்ல நடவடிக்கையாகும்.

குற்றச் செயல்கள் நடைபெறாமல் தடுப்பதில் காவல் துறையின் நடவடிக்கை மிக முக்கியமானது என்பதை கருத்தில் கொண்டு, வழக்குகளை பதிவு செய்வதிலும், விசாரிப்பதிலும், குற்றவாளிகள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பி விடாமல் சாட்சியங்கள் மற்றும் ஆவண காட்சியங்களை கண்டறிந்து உறுதி செய்வதிலும் காவல்துறையின் நடவடிக்கை முக்கியத்துவம் பெறுகிறது. அது தொடர்பாகவும் முதல்வர், தனி ஆய்வு செய்து சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tamil Nadu CPI welcomed govt setting up 26 new courts for crimes against women and children, aiding 18,733 pending cases

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.