மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்கிறார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

மேட்டூர் தொகுதியில் வீரப்பன் மகள் வித்யாராணி வேட்பு மனு தாக்கல்

மேட்டூர் சட்டப்பேரவைத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரான வீரப்பனின் மகள் வித்யாராணி வீரப்பன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

News image

வீரப்பனின் மகள் வித்யாராணி

Updated On :30 மார்ச் 2026, 1:36 pm IST

மேட்டூர் சட்டப்பேரவைத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரான வீரப்பனின் மகள் வித்யாராணி வீரப்பன் (35) இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

சேலம் மாவட்டம், மேட்டூரை அடுத்த போட்டனேரி 4 சாலையில் வசித்து வரும் இவர் வழக்குரைஞர் பட்டப்படிப்பு படித்து வருகிறார்.

மேட்டூர் சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும் மேட்டூர் வருவாய் கோட்டாட்சியருமான சுகுமாரிடம் வேட்புமனு வழங்கி உறுதிமொழி ஏற்றார்.

வேட்பு மனு தாக்கல் செய்யும் முன்பாக கொளத்தூர் அருகே உள்ள மூலக்காட்டி தனது தந்தையான வீரப்பன் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தி வந்தார்.

தமிழ்த்தாய் வாழ்க, தலைவர் பிரபாகரன் வாழ்க, எனது தந்தையார் வீரப்பன் வாழ்க என்று முழக்கமிட்டு உறுதிமொழியை முடித்தார்.

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் இன்று வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ள நிலையில் அரசியல் கட்சியினர் பலர் தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்து வருகின்றனர்.

Summary

Vidyarani Veerappan (35), daughter of Veerappan, the Naam Tamilar Party candidate for the Mettur Assembly constituency, filed her nomination today.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.