தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று தவெக தலைவர் விஜய் திங்கள்கிழமை தெரிவித்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடும் தவெக தலைவர் விஜய், இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
இதனைத் தொடர்ந்து, பெரம்பூரில் பிரசாரத்தை தொடங்கி விஜய், மக்கள் மத்தியில் பேசியதாவது:
”வடசென்னையின் மிகப்பெரிய அடையாளத்தின் ஒன்றாக இருக்கும் பெரம்பூர் தொகுதியில் பிரசாரத்தை தொடங்குகிறேன். உழைப்பின் வாசனை இருக்கும் மக்கள் மத்தியில் பிரசாரத்தை தொடங்குகிறேன்.
பெண்கள் பாதுகாப்பு இல்லாத, போதைப் பொருள் அதிகமுள்ள, சட்டம் - ஒழுங்கு சரியில்லாத தமிழ்நாட்டை காப்பாற்றியாக வேண்டும். தமிழ்நாட்டை இந்த நிலைக்கு கொண்டு வந்தது தீய சக்தி திமுகதான். இப்படியொரு ஆட்சியை நடத்தியதற்கு விரைவில் விடைபெறப் போகும் ஸ்டாலின் சார்தான் காரணம்.
அடிப்படை வசதிகூட இல்லாமல் எப்படி இருக்க முடியும். பெண் குழந்தைகள் இரவில் பாத்ரூம்கூட செல்ல முடியவில்லை. பாட்டி வயதில் இருப்பவர்களுக்குகூட பாதுகாப்பு இல்லை. டீக்கடையில் நிம்மதியாக டீ குடிக்க முடியவில்லை. போதையில் வந்து வெட்டுகிறார்கள். இது நாடா? இல்ல காடா?
ஸ்டாலின் சாருக்கு மக்கள் எல்லாம் முக்கியம் கிடையாது. அவருக்கு திமுக அரசுக்கும் 5 ஆண்டுகளில் குடும்பத்தோடு கொள்ளையடித்ததுதான் முக்கியம்.
டாஸ்மாக்கில் மட்டும் ரூ. 1,000 கோடி ஊழல், வெளியே தெரியாமல் நிறைய ஊழல் நடத்திருக்கிறது. நகராட்சித் துறையில் ரூ. 1,000 கோடி ஊழல் நடந்துள்ளது. நமது குழந்தைகள் வேலை வாய்ப்புக்காக அலைந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், காசை வாங்கிக் கொண்டு தகுதி இல்லாதவர்களுக்கு வேலை தருகிறார்கள்.
வசதியான வாழ்க்கை அனைத்தையும் உதறி தள்ளிட்டு உங்களுக்காக மட்டுமே வந்துள்ளேன். அனைத்து வழிகளையும் தாங்கிக் கொண்டு உங்களுக்காக நிற்கிறேன். இரண்டே முனைப் போட்டிதான்” எனத் தெரிவித்தார்.
Summary
Women are unsafe! Is this a civilized nation, or a jungle? Vijay in Perambur!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் விஜய் அமோக வெற்றி!
தவெக தலைவர் விஜய் பெரம்பூரில் முன்னிலை; திருச்சி கிழக்கில் பின்னடைவு

இன்று விஜய்யின் பெரம்பூர் பிரசாரம் ரத்து!
பெரம்பூரில் ‘விசில்’ கோலமிட்டு வாக்கு சேகரித்த விஜய்!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

