அதிமுக தேர்தல் அறிக்கையை காப்பியடித்து திமுக தங்களின் அறிக்கையை தயார் செய்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று (மார்ச் 29) விமர்சித்தார்.
திருநெல்வேலியில் வேட்பாளரை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி இன்று பிரசாரம் மேற்கொண்டார்.
பிரசாரத்தின்போது திமுக தேர்தல் அறிக்கையை விமர்சித்து எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:
''திமுக என்றாலே கருணாநிதி குடும்பம்தான். அது கட்சி அல்ல, கம்பெனி. ஆனால், அதிமுக அப்படி அல்ல. சாதாரண தொண்டன் கூட அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆக முடியும். அதற்கு நானே உதாரணம்.
மக்கள் விரும்பும் ஆட்சியை செய்தது அதிமுக. அப்படிப்பட்ட வாய்ப்பு மீண்டும் அமைய வேண்டும். கடும் வறட்சியிலும், கடும் புயலிலும், கரோனா பெருந்தொற்று காலத்திலும் அதிமுக கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டது. ஆனால் அப்போதுகூட சிறப்பான ஆட்சியை அதிமுக வழங்கியது.
ஒரு அரசாங்கம் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு அதிமுக உதாரணம். இப்போது வெள்ளம், வறட்சி, பெருந்தொற்று பரவல் என எதுவும் இல்லை. ஆனால் விலை மட்டும் அதிகரித்துள்ளது.
மளிகை சாமான்கள், காய்கறிகள், வரிகள் என அனைத்தும் உயர்ந்துள்ளது. ஏழைகளை பற்றி திமுகவிற்கு அக்கறை இல்லை. கட்டுமானப் பொருள்கள் விலை கடுமையாக அதிகரித்துள்ளது.
திமுக ஆட்சியில் கனவில் மட்டும்தான் வீடு கட்டிக்கொண்டு வாழ முடியும்.
அத்தியாவசிய பொருள்களின் பட்டியலில் கட்டுமானப் பொருள்களின் விலையை குறைப்போம் என திமுக தங்கள் வாக்குறுதியில் தெரிவித்துள்ளது.
ஒருமுறை மக்கள் ஏமாந்துவிட்டார்கள், மறு முறை ஏமாறா மாட்டார்கள். திமுக தேர்தல் அறிக்கை கொடுத்து மக்களை ஏமாற்றப்பார்க்கிறது.
பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டர் விலைக் குறைப்பு என்று சொன்னார்களே செய்தார்களா?. ஏற்கெனவே கொடுத்த வாக்குறுதிகள் என்னவானது?
தினமும் ஒரு அறிவிப்பு கொடுப்பார். பத்திரிகையில் வரும். அதனை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்தாமல் சென்றுவிடுவார். அறிவிக்கப்படும் திட்டங்களை நிறைவேற்ற குழுக்கள் அமைக்கிறார். அந்தக் குழுவின் மூலம் என்னப் பணிகள் நடக்கின்றன. எவ்வளவு தவறு நடந்தாலும் உண்மை செய்தி வெளியே வராது'' என எடப்பாடி பழனிசாமி பேசினார்.
Summary
TN Election 2026 campaign ADMK Edappadi palanisamy criticis dmk manifesto
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எடப்பாடி பழனிசாமி இன்று ஆளுநரைச் சந்திக்கிறார்?

புதுவை செல்கிறார் இபிஎஸ்! அதிமுக எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்த திட்டம்!

இளைஞர்களுக்கும் 'இருசக்கர வாகன' மானியம்! அதிமுகவின் மேலும் 10 வாக்குறுதிகள்!

தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

