தொகுதி மறுவரையில் தமிழ்நாட்டில் தொகுதிகள் எண்ணிக்கை குறையாது என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம், வீரபாண்டி தொகுதியில் பிரசாரம் மேற்கொண்ட அவர், தமிழ்நாட்டில் மூலை, முடுக்கெல்லாம் கஞ்சா அமோகமாக விற்பனை செய்யப்படுகிறது. திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. அதிமுக ஆட்சி அமைந்த 90 நாள்களில் கஞ்சா அறவே ஒழிக்கப்படும்.
அதிமுக மக்களுக்கான கட்சி, திமுக குடும்பத்திற்கான கட்சி. சட்டம் - ஒழங்கை அதிமுக நிலைநாட்டும், பெண்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். தொகுதி மறுவரையில் தமிழ்நாட்டில் தொகுதிகள் எண்ணிக்கை குறையாது. தமிழ்நாட்டுக்கு பாதிப்பு வராது என பிரதமர் மோடியும், அமித் ஷாவும் கூறியுள்ளனர்.
ஸ்டாலின் அணிந்த கருப்பு சட்டைக்கு வேலை இல்லாமல் போய்விட்டது. ஸ்டாலின் நலமோடு இருக்க வேண்டும். அதிமுக ஆட்சி அமைப்பதை அவர் பார்க்க வேண்டும். ஜெயலலிதா மறைந்த பிறகும், சேலம் மாவட்டத்தில் 11இல் 10 தொகுதிகளை வென்றோம். தமிழ்நாட்டுக்கும், தில்லிக்குமான தேர்தல் இல்லை.
நாம் வெல்லாவிட்டால் தமிழ்நாடு சர்வாதிகாரமாக மாறும். திமுக ஒரு கட்சி கிடையாது, அது ஒரு கார்ப்பரேட் கம்பெனி. அதன் சேர்மன் ஸ்டாலின். இவ்வாறு குறிப்பிட்டார்.
Summary
AIADMK General Secretary Edappadi Palaniswami has stated that the number of constituencies in Tamil Nadu will not decrease during the delimitation process.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எடப்பாடி பழனிசாமி இன்று ஆளுநரைச் சந்திக்கிறார்?
எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்; தமிழ்நாட்டில் வேண்டாம்! கனிமொழி கடும் விமர்சனம்

கரோனா வைரஸைவிட கொடிய வைரஸ் செந்தில் பாலாஜி: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

