மகளிர் உரிமைத் தொகை ரூ. 2 ஆயிரமாக உயர்த்தப்படும் என திமுக தனது தேர்தல் வாக்குறுதியாக அறிவித்துள்ளது.
முதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும் என்றும், புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் இனி ரூ. 1500 வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
திமுகவின் தேர்தல் அறிக்கையை வெளியிடுமுன்பு மு.க. ஸ்டாலின் பேசியதாவது:
மக்களின் கோரிக்கைகளை கேட்டு இந்த தேர்தல் அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை தயாரித்த துணை பொதுச்செயலாளர் கனிமொழி, டி.கே. எஸ். இளங்கோவன், டிஆர்பி ராஜா உள்ளிட்ட குழுவினருக்கு பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன் என மு.க. ஸ்டாலின் பேசினார்.
திமுக தேர்தல் வாக்குறுதிகள்
1 - 5 ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவர்களுக்கு கூடுதலாக 15 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் முதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும்.
மகளிர் உரிமைத் தொகை ரூ. 2000 ஆக உயர்த்தப்படும்.
சென்னையில் செம்மொழி மாநாடு நடத்தப்படும்.
முதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்.
மகளிர் சுய உதவிக் குழுவினர் தொழில் தொடங்க பிணையின்றி ரூ. 5 லட்சம் வழங்கப்படும்.
பேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25,000 ஆக உயர்த்தப்படும்.
டயாலிசிஸ் வசதிகள் இருமடங்காக அதிகரிக்கப்படும்
அனைத்து மாவட்டங்களிலும் விளையாட்டு விடுதிகள் உருவாக்கப்படும்.
முதியோர் உதவித் தொகை ரூ. 1200-லிருந்து ரூ. 2000 ஆக உயர்த்தப்படும்
மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை ரூ.2,500 ஆக உயர்த்தப்படும்.
திருச்சி, மதுரை, கோவையில் புதிய துணை நகரங்கள்.
அடுத்த 5 ஆண்டுகளில் புதிதாக 10,000 பேருந்துகள்.
பொள்ளாச்சியில் மொழிப்போராட்ட காட்சிக் கூடம் அமைக்கப்படும்
10 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும்.
35 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி (லேப்டாப்) வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ. 5 ஆக உயர்த்தப்படும்.
அன்னிய முதலீடுகள் ஈர்க்கப்பட்டு 50 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
மீன்பிடித் தடைக்கால உதவித்தொகை ரூ. 12,000 ஆக உயர்த்தப்படும்.
அனைத்து அரசு கலைக் கல்லூரிகளில் வைஃபை வசதி ஏற்படுத்தப்படும்.
மகளிரைக் கவர இல்லத்தரசி திட்டம் - ரூ.8,000 கூப்பன்!
இல்லத்திற்கு தேவையான வீட்டு உபயோகப் பொருள்களை புதிதாக வாங்கவோ, மாற்றாக வாங்கவோ இல்லத்தரசி என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.
இதன்படி, ஃப்ரிட்ஜ், வாஷிங்மெஷின், டிவி, கிரைண்டர், மைக்ரோவேவ் ஓவன் போன்றவற்றை வாங்க, ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும்.
வருமான வரி செலுத்தாத மகளிர் அனைவருக்கும் இந்த பட்டியலில் உள்ள பொருள்களை வாங்கிக்கொள்ள அவர் வசிக்கும் பகுதியில் உள்ள கடைகளில் தலா ரூ. 8 ஆயிரம் கூப்பன்
Summary
Tn Election 2025 Women's Entitlement Allowance of ₹2,000: DMK Election Promises!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மகளிர் உரிமைத் தொகை ரூ. 1000 வருமா? வராதா?

மே மாதம் மகளிர் உரிமைத் தொகை வருமா?

மீனவர்களுக்காக விஜய் அளித்த வாக்குறுதிகள்!
மகளிர் உரிமைத் தொகையைப் பெற்றுத்தந்தது அதிமுகதான்! - எடப்பாடி பழனிசாமி
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை
