மீனவர் பாதுகாப்பு உரிமைத் தொகை ரூ. 8 ஆயிரத்திலிருந்து ரூ. 20 ஆயிரமாக உயர்த்தப்படும் என தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் உறுதி அளித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் பேருந்து நிலையம் செல்லும் வழியில் உள்ள மீனவ குடியிருப்புகளிடையே விஜய் பிரசாரம் மேற்கொண்டார்.
மீனவ மக்களிடையே விஜய் பேசியதாவது:
'' மீனவ மக்களின் நலனுக்காக தவெக சிறப்பான திட்டங்களை வகுத்துள்ளது. கடல் தாய் வீடு திட்டத்தில் குடிசை வீடுகளை அகற்றி, சிதிலமடைந்த மீனவர்களின் வீடுகள் புதிதாக கட்டித்தரப்படும்.
சிறைப்பிடிக்கப்படும் மீனவர்களின் படகுகள் திரும்பப் பெறப்படும் வரை, படகு பாதுகாப்பு நிதி என்ற பெயரில் இடைக்கால நிவாரணமாக ரூ. 5 லட்சம் வழங்கப்படும்.
மீனவர் பாதுகாப்பு உரிமைத்தொகை 8 ஆயிரத்திலிருந்து ரூ. 20 ஆயிரமாக உயர்த்தப்படும்.
மீனவர் எரிபொருள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ், மானிய டீசல் 3,500 லிட்டராக உயர்த்தப்படும்.
ஒரு லிட்டருக்கு ரூ.15 என்ற நிலையான மானியம் நேரடியாக வங்கிக் கணக்கிற்கு செலுத்தப்படும்.
இது வெறும் தொடக்கம் தான். திமுக கொடுப்பதைப்போன்ற வெற்று வாக்குறுதிகள் கிடையாது. உங்களை உண்மையாக நேசிப்பதன் வெளிப்பாடு'' என விஜய் பேசினார்.
Summary
TN Election 2026 tvk Vijay Made Promises to Fishermans
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
எதன் அடிப்படையில் விஜய்க்கு கான்வாய், கூடுதல் பாதுகாப்பு கொடுக்கப்பட்டது? ஆளுநர் கேள்வி

விஜய் வீட்டின்முன் பாதுகாப்பு அகற்றம்! | TVK | Vijay

மகளிா் உரிமைத் தொகை ரூ.2 ஆயிரமாக உயா்த்தப்படும்: திமுக வேட்பாளா் எம்.சிவபாலன்
மகளிர் உரிமைத் தொகை ரூ. 2000 : திமுக தேர்தல் வாக்குறுதிகள்!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


