தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் பயனாளிகளுக்கு மே மாத தொகை கிடைக்குமா என்ற கேள்வி பெண்கள் மத்தியில் எழுந்துள்ளது.
நாட்டிலேயே முதல்முறையாக பெண்களுக்கு ரூ. 1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு 2023 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது.
இந்த திட்டத்தின் பயனாளிகள் எண்ணிக்கை 1.14 கோடியாக இருந்த நிலையில், புதிதாக திருமணமாகி ரேஷன் அட்டை பெற்றவர்கள், விடுபட்டவர்கள் உள்ளிட்டோர் கடந்தாண்டு சேர்க்கப்பட்டு தற்போது 1.31 கோடி பேர் பயனடைந்து வருகிறார்கள்.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தால் மகளிர் உரிமைத் தொகை விடுவிக்க முடியாத என்ற காரணத்தினால், பிப்ரவரி மாதமே அனைத்து கணக்குகளிலும் ரூ. 5,000 வரவு வைக்கப்பட்டது.
பிப்ரவரி மாதத்துக்கான ரூ. 1,000 பணத்துடன், மார்ச், ஏப்ரல் ஆகிய மாதங்களுக்கு முன்பணமாக ரூ. 2,000 மற்றும் கோடைக்கால சிறப்பு தொகுப்பாக ரூ. 2,000 என மொத்தம் ரூ. 5,000 வழங்கப்பட்டது.
இந்த நிலையில், மே மாதத்துக்கான மகளிர் உரிமைத் தொகை பெண்களின் கணக்குகளில் வரவு வைக்கப்படுமா? என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது.
மே 6 வரை தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், அதன்பின்னரே மகளிர் உரிமைத் தொகை பற்றிய அறிவிப்பு வெளியாகும்.
திமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் பட்சத்தில் மே இரண்டாம் வாரத்தில் மகளிர் உரிமைத் தொகையை வழக்கம்போல் விநியோகிக்கும்.
ஆனால், வேறு கட்சிகள் ஆட்சி அமைக்கும் பட்சத்தில் புதிய அரசு பொறுப்பேற்ற பிறகே மகளிர் உரிமைத் தொகை பற்றிய அறிவிப்புகள் வெளியாகும்.
தேர்தலில் வெற்றி பெற்றும் மீண்டும் ஆட்சி அமைத்தால் மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000 ஆக உயர்த்தப்படும் என்று திமுகவும், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் குல விளக்குத் திட்டத்தில் ரூ. 2,000 வழங்குவோம் என்று அதிமுகவும், ரூ. 2,500 வழங்குவோம் என்று தவெகவும் வாக்குறுதி அளித்துள்ளன.
இந்த நிலையில், புதிய அரசுகள் பதவியேற்கும் பட்சத்தில் அவர்களின் திட்டங்களுக்கு அமைச்சரவையில் ஒப்புதல் பெற்று, தாமதமாகவே விடுவிக்கப்படும்.
திமுக அரசே பொறுப்பேற்றாலும் உடனடியாக ரூ. 2,000 ஆக உயர்த்தப்படாது. ஏற்கெனவே விநியோகிக்கப்படும் ரூ. 1,000 தான் மே மாதத்துக்கு வழங்கப்படும்.
Summary
Will the Women's Entitlement Allowance amount be received in May?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இந்த மாதம் மகளிா் உதவித் தொகை 1,000 ரூபாயா?, 2,500 ரூபாயா?

மகளிர் உரிமைத் தொகை ரூ. 1000 வருமா? வராதா?

மகளிர் இடஒதுக்கீடு என்ற போர்வையில் தொகுதி மறுவரையறை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

மகளிர் இடஒதுக்கீடு: நாட்டிலேயே சத்தீஸ்கரில் அதிக பெண் சட்டப்பேரவை உறுப்பினர்கள்!
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை


