மே மாதத்துக்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ. 1,000 பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வெள்ளிக்கிழமை வரவுவைக்கப்பட்டது.
நேற்று, மே 14 காலை முந்தைய புதுமைப் பெண் மற்றும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் உயர்க்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ரூ. 1,000 வரவுவைக்கப்பட்டது.
திமுக அரசு கொண்டு வந்த கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண் மற்றும் தமிழ்ப் புதல்வன் திட்டம், புதிதாக பதவியேற்றுள்ள முதல்வர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான அரசு தொடருமா என்ற கேள்வி நிலவியது.
மாதம்தோறும் 7 ஆம் தேதி வரவுவைக்கப்படும் புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன் திட்ட நிதி பயனாளிகளுக்கு வராமல் இருந்தது.
இதுபற்றி சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் புதன்கிழமை கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்த முதல்வர் விஜய், முந்தைய அரசு கொண்டுவந்த மக்கள் நலத்திட்டங்கள் தொடரும் என உறுதியளித்தார்.
இதையடுத்து, வியாழக்கிழமை காலை புதுமைப் பெண் மற்றும் தமிழ்ப் புதல்வன் திட்டங்களின் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு ரூ. 1,000 வரவுவைக்கப்பட்டது.
இதனிடையே, தேர்தலில் தவெகவின் முக்கிய வாக்குறுதியாக மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,500 ஆக உயர்த்தப்படும் என்பதாகும். அதன்படி, மே மாதம் வழக்கம்போல் ரூ. 1,000 வரவுவைக்கப்படுமா அல்லது வாக்குறுதிபடி ரூ. 2,500 கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் இருந்தது.
இந்த நிலையில், முதல்வர் விஜய் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ”மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தினை மறுசீரமைப்பு செய்ய அரசுக்கு உரிய கால அவகாசம் தேவைப்படுகிறது.
மே 2026 மாதத்திற்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, பயனாளிகளின் வங்கிக் கணக்கில் விரைவில் நேரடியாக வரவு வைக்கப்படும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், வழக்கமாக மகளிர் உரிமைத் தொகை வரவுவைக்கப்படும் 15 ஆம் தேதியே மே மாதத்துக்கான ரூ. 1,000 வரவுவைக்கப்பட்டுள்ளது.
Summary
Women's Entitlement amount of ₹1,000 Credited
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாணவர்களுக்கு ரூ. 1,000 உதவித் தொகை வரவுவைப்பு! நாளை மகளிர் உரிமைத் தொகை?

மே மாத மகளிர் உரிமைத்தொகை ரூ. 1,000? ரூ. 2,500? எப்போது வரும்?

மகளிர் உரிமைத் தொகை ரூ. 1000 வருமா? வராதா?

மே மாதம் மகளிர் உரிமைத் தொகை வருமா?
விடியோக்கள்

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


