திமுக அரசு கொண்டு வந்த, மாதந்தோறும் ரூ. 1000 வழங்கப்படும் மகளிர் உரிமைத் தொகையானது இந்த மாதம் வழங்கப்படுமா என்பது குறித்து மக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.
இந்தியாவிலேயே மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கும் திட்டம் தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில்தான் தொடங்கப்பட்டது.
தமிழ்நாட்டில் 1.31 கோடி பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வீதம் உரிமைத் தொகை அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.
தேர்தல் நடைபெறவுள்ளதையொட்டி, முன்கூட்டியே 3 தவணைகளுக்கான மகளிர் உரிமைத் தொகையாக ரூ.3 ஆயிரம், கோடைக் கால சிறப்புத் தொகையாக ரூ.2 ஆயிரம் என மொத்தம் ரூ.5 ஆயிரத்தை மகளிர் உரிமைத் தொகை பெறும் பெண்களின் வங்கிக் கணக்கில் தமிழக அரசு வரவு வைத்தது.
இதுவரை தமிழ்நாட்டில் 1,13,75,492 பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகையாக ரூ. 30,838 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஒவ்வொரு மகளிரின் வங்கிக் கணக்கிலும் ரூ.26,000 செலுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மே மாதத்துக்கான மகளிர் உரிமைத் தொகையானது பெண்களின் கணக்குகளில் வரவு வைக்கப்படுமா? என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தை திமுக அரசு கொண்டு வந்திருந்தாலும், இந்தத் திட்டம் அரசு திட்டம் என்பதால் நிறுத்தி வைப்பதற்கான வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. இந்த மாதத்தின் இரண்டாவது வாரத்தில் மகளிர் உரிமைத் தொகை ரூ. 1000 வரவு வைக்கப்படும் என்றே கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, தவெக தலைமையிலான புதிய ஆட்சி அமைந்தவுடன் அந்தக் கட்சி வாக்குறுதியாக அளித்துள்ள ரூ. 2,500 ரொக்கத் தொகை, புதிய அமைச்சரவையில் ஒப்புதல் பெறப்பட்டு அமல்படுத்தப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
Summary
A question has arisen among the public as to whether the monthly Women's Entitlement Scheme introduced by the DMK government and providing a monthly stipend of 1,000 will be disbursed this month.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மகளிர் உரிமைத் தொகை, இலவசப் பேருந்து திட்டங்களுக்கான செலவு எவ்வளவு?

மகளிர் உரிமைத் தொகை ரூ. 1,000 வரவுவைப்பு!
மே மாத மகளிர் உரிமைத் தொகை விரைவில் கிடைக்கும்! முதல்வர் விஜய் அறிவிப்பு

மே மாத மகளிர் உரிமைத்தொகை ரூ. 1,000? ரூ. 2,500? எப்போது வரும்?
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை


