புதுவையில் தங்கவைக்கப்பட்டுள்ள அதிமுக எம்எல்ஏக்களைச் சந்திக்க கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து புதுவைக்கு புறப்பட்டுச் சென்றார்.
நடந்து முடிந்த தமிழக தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்ற தவெக, ஆட்சி அமைக்க பிற கட்சிகளின் ஆதரவு தேவைப்படும் நிலையில், திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் (5 எம்எல்ஏக்கள்) முதல் கட்சியாக நேற்று தவெகவுடனான புதிய கூட்டணியை அறிவித்தது.
எனினும் மேலும் சில கட்சிகளின் ஆதரவு தேவைப்படுவதால் விஜய் ஆட்சியமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. விஜய் இரண்டாவது முறையாக ஆளுநரை இன்று சந்தித்தபோது போதிய எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை விஜய்யிடம் ஆளுநர் கேட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அந்தவகையில் விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவை தவெக கோரியுள்ளது.
இதனிடையே அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் புதுவையில் ஒரு சொகுசு விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசியல் நிலவரம் குறித்து அதிமுக ஆலோசனை மேற்கொண்ட நிலையில் தற்போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி புதுவை புறப்பட்டுச் சென்றுள்ளார். அதிமுக எம்எல்ஏக்களைச் சந்தித்து அவர் ஆலோசனை மேற்கொள்ளவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று இரவு 7 மணிக்கு அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது. அதில் சட்டப்பேரவைத் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வாக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
Edappadi palanisamy meets ADMK MLAs in puducherry
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எடப்பாடி பழனிசாமி இன்று ஆளுநரைச் சந்திக்கிறார்?

எடப்பாடியில் குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார் இபிஎஸ்!
தில்லியின் அடிமை இபிஎஸ்: உதயநிதி கடும் தாக்கு

மக்கள் மீண்டும் ஏமாற மாட்டார்கள்: திமுக அறிக்கையை விமர்சித்த இபிஎஸ்!
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை


