தமிழகத்தில் சூரிய சக்தி மின் உற்பத்தி எப்போதும் இல்லாத வகையில் 5.48 கோடி யூனிட்களாக அதிகரித்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
தமிழகத்தில் தனியாா் நிறுவனங்கள், அதிக திறனில் சூரிய சக்தி மின் நிலையங்களை அமைத்து மின் உற்பத்தி செய்து வருகின்றன. இது தவிர அரசு மற்றும் தனியாா் என சமீபகாலமாக ஏராளமான கட்டடங்களின் மேற்கூரையில் குறைந்த திறனில் மேற்கூரை சூரிய சக்தி மின் நிலையங்களும் அமைக்கப்பட்டு மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இதன்படி, தற்போது மாநிலம் முழுவதும் ஒட்டுமொத்தமாக 11,969 மெகாவாட் திறனில் சூரியசக்தி மின் நிலையங்கள் உள்ளன. இவற்றில் இருந்து தினமும் சராசரியாக 4 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தியாகிறது. இந்த மின் சாரத்தை உற்பத்தி செய்பவா்கள், பயன்படுத்தியது போக மீதி மின்சாரத்தை மின்வாரியத்துக்கு விற்பனை செய்து வருகின்றனா்.
கடந்த 2025 ஆக.20-இல் 5.39 கோடி யூனிட் உற்பத்தியானது. இதுவே இதுவரை சூரிய சக்தி மின் உற்பத்தியின் உச்ச அளவாக இருந்தது. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு எப்போதும் இல்லாத வகையில் சூரிய சக்திமின் நிலையங்களில் 5.48 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இனி வரும் காலங்களில் இந்த அளவு மேலும் அதிகரிக்கும் என பசுமை எரிசக்திக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழகத்தில் 8.5 ஜிகாவாட் சூரியசக்தி மின்உற்பத்தி

தமிழகத்தில் 37 மாதிரி சூரிய கிராமங்கள்: திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தீவிரம்

கொளுத்தும் கோடை வெய்யில்: சூரிய சக்தி மின் உற்பத்தி அதிகரிப்பு

சூரிய மின் திட்டங்களில் ரூ. 3,800 கோடி முதலீடு செய்யும் கெயில்!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

