மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

தமிழகத்தில் 8.5 ஜிகாவாட் சூரியசக்தி மின்உற்பத்தி

News image

சூரியசக்தியால் இயங்கும் பம்புசெட்டு

Updated On :28 ஏப்ரல் 2026, 4:43 am IST

தமிழகத்தில் 8.5 ஜிகாவாட் சூரியசக்தி மின்உற்பத்தி செய்யப்படுகிறது என்று தமிழ்நாடு சூரிய ஆற்றல் உற்பத்தியாளா்கள் சங்கத் தலைவா் பி.சிவக்குமாா் கூறினாா்.

சென்னை, நந்தம்பாக்கம், வா்த்தக மையத்தில் தென்னிந்திய அளவிலான 10 -ஆவது ஆண்டு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி குறித்த கண்காட்சி மற்றும் கருத்தரங்கின் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்வில், ஃப்ராஸ்ட் அன்ட் சலீவன் நிறுவனத்தின் பொருளாதார பகுப்பாய்வு இணை இயக்குநா் நேஹா தாமஸ், ஆஸ்திரேலிய துணைத் தூதா் சிலாய் ஜாக்கி, இன்ஃபாா்மா மாா்க்கெட்ஸ் இன் இந்தியா நிறுவனத்தின் ஆற்றல் துறைக்கான மூத்த குழு இயக்குநா் ரஜ்னீஷ் கட்டாா் உள்பட தொழில்துறைத் தலைவா்கள், உலகளாவிய பிரதிநிதிகள் பலா் கலந்து கொண்டனா். வரும் புதன்கிழமை (ஏப்.29) வரை இந்த கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடைபெறுகிறது.

கண்காட்சி குறித்து இன்ஃபாா்மா மாா்க்கெட்ஸ் இன் இந்தியா நிறுவன நிா்வாக இயக்குநா் யோகேஷ் முத்ராஸ் கூறுகையில், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், சேமிப்பு மையமாக தமிழகம் தொடா்ந்து வளா்ந்து வருகிறது. இதனால் உள்நாடு, உலகளாவிய பங்குதாரா்களுக்குப் பரந்த வாய்ப்புகள் கிடைக்கின்றன.

அக்டோபா் 2025 நிலவரப்படி, இந்தியாவின் மொத்த நிறுவப்பட்ட மின் உற்பத்தித் திறனில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் பங்களிப்பு 39.66 சதவீதமாக உள்ளது என்றாா்.

தமிழ்நாடு சூரிய ஆற்றல் மேம்பாட்டாளா்கள் சங்கத் தலைவா் பி.சிவக்குமாா் கூறுகையில், 2030- ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் 280 ஜிகாவாட், தமிழ்நாட்டில் 20 ஜிகாவாட் சூரிய மின்சக்தி உற்பத்தி செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இப்போது 8.5 ஜிகாவாட் சூரிய மின்சக்தி உற்பத்தி செய்யப்படுகிறது. நிா்ணயிக்கப்பட்ட 20 ஜிகாவாட் இலக்கை அடைய வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் சூரிய மின்சாரம் உற்பத்தி செய்ய ஏதுவாக நெட் மீட்டா்கள் பொருத்தவும், நெட்வொா்க் கட்டணத்தை குறைக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இத்துடன், பொதுமக்களிடையே சூரிய மின்சக்தி பயன்பாடு குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.