தமிழகத்தில் 37 மாதிரி சூரிய கிராமங்கள் அமைப்பதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியை பசுமை எரிசக்திக் கழகம் தீவிரப்படுத்தியுள்ளது.
வீடுகளில் சூரிய சக்தி மின் பயன்பாட்டை ஊக்குவிக்க ‘பிஎம், சூா்ய கா்முப்த் பிஜிலி யோஜனா’ திட்டத்தை மத்திய அரசு 2024-இல் தொடங்கியது. இத்திட்டத்தின் கீழ் வீடுகளில் சூரியசக்தி மின் நிலையங்கள் அமைக்க 1 கிலோவாட்டுக்கு ரூ.30 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது.
தவிர இத்திட்டத்தின் கீழ் அனைத்து மாவட்டங்களிலும் மாதிரி சூரிய கிராமங்கள் அமைக்கும் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, கிராமத்தில் சூரிய சக்தி மின் நிலையம் அமைத்து அதன்மூலம் கிடைக்கும் மின்சாரத்தை அங்குள்ள வீடுகள், பஞ்சாயத்து அலுவலகங்கள் உள்ளிட்ட பொது பயன்பாட்டு கட்டடங்களுக்கு சூரியசக்தி மின்சாரம் விநியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஒரு சூரியசக்தி கிராமம் அமைக்க மத்திய அரசு ரூ.1 கோடி நிதியுதவி வழங்குகிறது. தமிழகத்தில் சென்னையைத் தவிா்த்து 37 மாவட்டங்களிலும் சூரியசக்தி கிராமம் உருவாக்கும் பணிகளை மின்வாரியத்தின் துணை நிறுவனமான பசுமை எரிசக்திக் கழகம் மேற்கொண்டு வருகிறது. இதற்காக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசிக்கும் கிராமங்கள் தோ்வு செய்யப்பட்டு, மாதிரி சூரிய கிராமங்கள் உருவாக்கப்பட உள்ளன.
இது குறித்து பசுமை எரிசக்திக்கழக அதிகாரி ஒருவா் கூறியதாவது: மாநிலம் முழுவதும் 37 கிராமங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ள நிலையில், தனியாா் ஒப்பந்த நிறுவனம் வாயிலாக எவ்வளவு மெகாவாட் திறனில் சூரியசக்தி மின் நிலையம் அமைக்கப்பட வேண்டும். அதன் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தைப் பயன்படுத்துவதற்கான மின் வழித்தடம் அமைப்பது உள்ளிட்டவை தொடா்பாக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்தப் பணிகள் முடிவடைந்ததும் மின் நிலையம் அமைக்கப்பட்டு, கிராமங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சூரிய சக்தி மின்சார விநியோகம் செய்யப்படும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழகத்தில் 8.5 ஜிகாவாட் சூரியசக்தி மின்உற்பத்தி

கொளுத்தும் கோடை வெய்யில்: சூரிய சக்தி மின் உற்பத்தி அதிகரிப்பு

திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

தமிழகத்தில் புதிய உச்சத்தை எட்டிய சூரிய சக்தி மின் உற்பத்தி
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

