பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு வழக்கு தொடர்பாக, தமிழகத்தில் 18 இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி, சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய நகரங்களில் 18 இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
அரசுப் பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1,058 விரிவுரையாளர் பணியிடங்களுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டித் தேர்வில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக, தேர்வு எழுதியவர்கள் புகார் செய்தனர்.
புகாரின் அடிப்படையில், 199 பேர் போட்டித் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மாற்றப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, போட்டித் தேர்வின் விடைத்தாள்களை திருத்திய தனியார் நிறுவனத்திடம் போலீஸார் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில், பாலிடெக்னிக் விரிவுரையாளர் முறைகேடு தொடர்பாக, கடந்த 2017 ஆம் ஆண்டு சென்னை மத்திய குற்றப்பிரிவு பதிவு செய்த வழக்கின் அடிப்படையில், அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
சட்ட விரோத பண பரிமாற்றம் நடைபெற்றதாக வந்த புகாரின் அடிப்படையில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
Summary
The Enforcement Directorate is conducting raids at 18 locations across Tamil Nadu in connection with the polytechnic lecturer recruitment scam.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாலிடெக்னிக் விரிவுரையாளா் தோ்வு முறைகேடு வழக்கு: 18 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

கேரள முன்னாள் முதல்வா் மகளின் வங்கி லாக்கரில் சோதனை: பண முறைகேடு வழக்கில் நடவடிக்கை

ஆந்திர மதுபான ஊழல் வழக்கு: முன்னாள் ஒய்எஸ்ஆர் அமைச்சர் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை!
சென்னையில் 10 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

