ஆந்திர மதுபானக் கடத்தல் முறைகேடு வழக்குத் தொடர்பாக முன்னாள் ஒஎஸ்ஆர் காங்கிரஸ் அமைச்சர் கருமுரி நாகேஸ்வர ராவ் உள்ளிட்டோரின் இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த வழக்குத் தொடர்புடையதாகக் கூறப்படும் நபர்களுக்குச் சொந்தமான மொத்தம் ஐந்து இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டது. இதில் முன்னாள் குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் கே. நாகேஸ்வர ராவ் மற்றும் அவரது மகனின் இடங்களும் அடங்கும்.
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்தச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த விசாரணை ஆந்திரப் பிரதேச மாநில மதுபானங்கள் கழகம் தொடர்பானதாகும்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் அரசுக்கு ரூ. 195.33 கோடி அளவுக்கு இழப்பை ஏற்படுத்தியதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சோதனையின்போது ரூ. 8 லட்சம் ரொக்கம், இரண்டு ரோலக்ஸ் கைக்கடிகாரங்கள், சில வாகனங்கள், "குற்றத்தை நிரூபிக்கும் வகையிலான" ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் சாதனங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.
இந்தப் பொருள்கள் அனைத்தும் யாருடைய இடங்களிலிருந்து கைப்பற்றப்பட்டன என்பது குறித்த விவரங்களை அவர்கள் வெளியிடவில்லை.
The Enforcement Directorate on Thursday raided multiple premises, including that of former YSRCP minister Karumuri Nageswara Rao, in a money laundering case linked to an alleged Rs 195 crore liquor transport scam in Andhra Pradesh, officials said.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கேரள முன்னாள் முதல்வா் மகளின் வங்கி லாக்கரில் சோதனை: பண முறைகேடு வழக்கில் நடவடிக்கை

பண முறைகேடு வழக்கு - கேரள முன்னாள் முதல்வா் மகளிடம் அமலாக்கத் துறை விசாரணை

ரூ. 142 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல்: மூன்று மாநிலங்களில் அமலாக்கத் துறை சோதனை
முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை விசாரிக்க அமலாக்கத் துறை கடிதம்!
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


