பிரபல இயக்குநர் பாரதிராஜா உடல்நலக் குறைவால் இன்று காலமானார். திரையுலக கலைஞர்களும், அரசியல் தலைவர்களும், ரசிகர்களும் அவரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தக் குவிந்து வருகின்றனர்.
கிராமத்து கதைகளை படமாக்குவதில் கைதேர்ந்தவர் பாரதிராஜா. தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, இந்தியிலும் இவர் பல படங்களை இயக்கி, பல விருதுகளை வென்றுள்ளார். 6 தேசிய விருதுகள், 4 ஃபிலிம்ஃபேர் விருதுகள், 2 தமிழக அரசின் சினிமா விருதுகள், 2 நந்தி விருதுகளை பெற்றுள்ள பாரதிராஜாவிற்கு சத்யபாமா பல்லைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கி கெளரவித்துள்ளது. முதல் மரியாதை, வேதம் புதிது, கருத்தம்மா உள்ளிட்ட படங்களுக்காக 6 முறை தேசிய விருது வென்றுள்ளார்.
தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநரான பாரதிராஜாவின் மகன் மனோஜ், கடந்தாண்டு மார்ச் மாதம் மாரடைப்பு காரணமாக காலமானார். அதன்பிறகு, பாரதிராஜாவின் உடல்நிலை மோசமடைந்த நிலையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். சென்னை நீலாங்கரை இல்லத்தில் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி புதன்கிழமை காலை அவர் காலமானார்.
மறைந்த பாரதிராஜாவின் உடலுக்கு முதல்வர் ஜோசப் விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பாரதிராஜா உடலுக்கு முழு அரசு மரியாதை செலுத்தப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், இயக்குநர்கள், பாக்யராஜ், சீமான், நடிகர்கள் சிவக்குமார், சூர்யா, ராசிகா உள்ளிட்ட பலரும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தென்னிந்தியத் திரையுலகில் மூத்த இயக்குநர் பாரதிராஜா அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் நாளை ஒரு நாள் அனைத்து சினிமா மற்றும் சின்னதிரை படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்படுவதாகத் தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.
1970-களின் பிற்பகுதியில் பாரதிராஜாவின் படங்கள் தமிழகத்தில் பேச ஆரம்பித்தபோது அதைக் கொண்டுசென்ற கருத்துகளும், எடுத்துச் சொன்ன கருத்துகளும் இன்றைக்கும் தமிழ் திரையுலகில் எதிரொலித்துக் கொண்டிருக்கின்றது.
அவர் அறிமுகப்படுத்திய அத்தனை நடிகர்களும் இன்றைக்கு வரைக்கும் தங்களுடைய திரைத்துறையில் அவர்கள் ஏற்று நடிக்கக்கூடிய கதாபாத்திரத்தில் தங்களுடைய முத்திரையைப் பதித்து வருகின்றனர். சாமானியர்களை நடிகர்களாகவும், நட்சத்திரங்களாகவும் உருவாக்கியவர் பாரதிராஜா.
இயக்கம் மட்டுமின்றி அண்மைக் காலங்களில் நடிகராக ஏராளமான படங்களில் பாரதிராஜா நடித்துள்ளார். பாண்டிய நாடு, குரங்கு பொம்மை, திருச்சிற்றம்பலம், நம்ம வீட்டுப் பிள்ளை போன்ற படங்களில் நடித்துள்ளார்.
பாரதிராஜா வென்ற 6 தேசிய விருதுகளின் விவரங்கள்
1981-ல் வெளியான புகழ்பெற்ற தெலுங்கு திரைப்படமான 'சீதாகோக சிலகா' என்ற படத்திற்குத் தேசிய விருது பெற்றார். அலைகள் ஓய்வதில்லை என்ற தமிழ்த் திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பே இந்தத் திரைப்படமாகும். தமிழ், தெலுங்கில் இரண்டையும் பி. பாரதிராஜா இயக்கினார். இந்தப் படத்தில் கார்த்திக், அருணா, சரத்பாபு ஆகியோர் நடித்துள்ளனர்.
1985-ல் வெளியான திரைப்படம் 'முதல் மரியாதை' பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ராதா, வடிவுக்கரசி, ரஞ்சனி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
1987-ல் சமூகப் பிரச்னைகளுக்கான சிறந்த திரைப்படமான 'வேதம் புதிது' எனும் திரைப்படத்திற்கு பாரதிராஜா தேசிய விருது பெற்றார். இப்படத்தில் சத்யராஜ், அமலா மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படத்தின் பாடலான கண்ணுக்குள் நூறு நிலவா என்ற பாடல் மிகவும் பிரபலம்.
1994-ல் குடும்ப நலனுக்கான சிறந்த திரைப்பட விருது 'கருத்தம்மா' படத்திற்கு வழங்கப்பட்டது. பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த திரைப்படத்தில் ராஜா, மகேஷ்வரி போன்ற பலர் நடித்திருந்தனர். பாரதிராஜாவின் தயாருடைய பெயரை இப்படத்தின் தலைப்பாக வைக்கப்பட்டது. இந்தக் கதைக்களம் ஒரு கிராமத்தில் நிகழ்ந்த உண்மை நிகழ்வை அடிப்படையாகக் கொண்டது.
1996-ல் 'அந்தி மந்தாரை' சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான விருது அவருக்கு வழங்கப்பட்டது. பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகுமார், ஜெயசுதா ஆகியோர் நடித்திருந்தனர். ஏ.ஆர் ரகுமான் இத்திரைப்படத்திற்கு இசையமைத்தார்.
2001-ல் வெளிவந்த திரைப்படம் 'கடல் பூக்கள்'. முரளி நடித்த இப்படத்தை பாரதிராஜா இயக்கினார். இப்படத்தின் சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருது அவருக்குக் கிடைத்தது.
மேலும், திரைத்துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக 2004-ம் ஆண்டு இந்திய அரசு அவருக்கு பத்ம ஸ்ரீ விருதும், 2005-ல் சத்யபாமா பல்கலைக்கழகத்தால் கௌரவ டாக்டர் பட்டமும் பாரதிராஜாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
He has won the National Award six times for films such as Mudhal Mariyathai, Vedham Pudhithu, and Karuththamma.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாரதிராஜா மறைவு! செய்திகள் நேரலை
இயக்குநர் பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் புகழஞ்சலி!

பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!
பாரதிராஜாவுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்பு!
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

