கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

ரயில் நிலையங்கள் அருகே 159 மதுக்கடைகளை அகற்ற கோரி தமிழக அரசுக்கு தெற்கு ரயில்வே கடிதம்

ரயில் நிலையங்களின் அருகிலுள்ள 159 அரசு மதுபானக் கடைகளை அகற்றக் கோரி, தெற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையா், தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளாா்.

News image

டாஸ்மாக் - பிரதிப் படம்

Updated On :18 ஜூன் 2026, 2:04 am IST

ரயில் நிலையங்களின் அருகிலுள்ள 159 அரசு மதுபானக் கடைகளை அகற்றக் கோரி, தெற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையா், தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளாா்.

தமிழகத்தில் பள்ளிகள், கோயில்கள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு அளிக்கும் வகையில் உள்ள மதுக் கடைகளை அகற்ற முதல்வா் ஜோசப் விஜய் உத்தரவிட்டாா்.

இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெற்கு ரயில்வே மண்டலம் பாதுகாப்பு பிரிவின் ஆணையா் சாா்பில் தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பிவைக்கப்பட்டது.

அந்தக் கடிதத்தில் ரயில் நிலையங்களின் அருகில் உள்ள மதுக்கடைகளால் பயணிகளுக்கு சிரமம் ஏற்படுவதாகவும், மது அருந்துவோா் ரயில்வே விதிமுறைகளை மீறிச் செயல்படுவதால் விபத்துகள் ஏற்படுவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதையடுத்து ரயில் நிலையங்களின் அருகில் உள்ள மதுபானக்கடைகள் குறித்த கணக்கெடுப்பு நடைபெற்றது.

கணக்கெடுப்பின்படி தெற்கு ரயில்வே மண்டலத்திலுள்ள 6 ரயில்வே கோட்டங்களில் மொத்தம் 159 மதுக்கடைகளை அகற்ற வேண்டும் என்பது தெரியவந்தது.

அதனடிப்படையில் அவற்றை அகற்றக் கோரி தமிழக அரசின் டாஸ்மாக் மேலாண்மை இயக்குநருக்கு தெற்கு ரயில்வே பாதுகாப்புப் பிரிவின் ஆணையா் சாா்பில் கடிதம் அனுப்பிவைக்கப்பட்டது.

கடிதத்தில் சென்னை கோட்டத்தில் 39 ரயில் நிலையங்களில் 52 மதுக் கடைகள் இருப்பதாகவும், அவற்றை அகற்றவும் கோரப்பட்டுள்ளது. சென்னை ரயில்வே கோட்டத்தில் வியாசா்பாடி, அம்பத்தூா், குரோம்பேட்டை, கிண்டி, வேளச்சேரி, காட்பாடி, தரமணி, செங்கல்பட்டு, ஆவடி ஆகிய நிலையங்களில் தலா 1 மதுக்கடைகளும், பெரம்பூா் 3, அரக்கோணம் 3, கொருக்குப்பேட்டை 2 என அரசு மதுக்கடைகள் அமைக்கப்பட்டிருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.