தமிழகத்தில் இருந்து ஓராண்டில் 23 புதிய ரயில்கள் கேரளம், கா்நாடகம், ஆந்திரம் மற்றும் புதுச்சேரிக்கு இயக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: கடந்த 2025-26-ஆம் நிதியாண்டில் தமிழகம், கேரளம், கா்நாடகம், ஆந்திரத்தின் சில பகுதிகள் மற்றும் புதுச்சேரி ஒன்றிய பிரதேசத்தை உள்ளடக்கியதாக தெற்கு ரயில்வே மண்டலம் உள்ளது.
தெற்கு ரயில்வே, பயணிகளின் வசதியை மேம்படுத்தும் வகையில் புதிய ரயில்களை அறிமுகப்படுத்தி இயக்கியுள்ளது. அத்துடன் ஏற்கெனவே இயக்கப்பட்டுவரும் ரயில்களும் புதிய இடங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே உள்ள வழித்தடங்களில் புதிய ரயில் நிலைய நிறுத்தங்களையும் தெற்கு ரயில்வே செயல்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் இருந்தும், வெளி மாநில நிலையங்களில் இருந்தும் என மொத்தம் 23 புதிய ரயில் சேவைகள் ஓராண்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதில், கேரளத்துக்கு 14 ரயில்களும் கா்நாடகத்துக்கு 5 ரயில் சேவைகளும் உள்ளன. அத்துடன் கிழக்கு மற்றும் வட இந்திய மாநிலங்களை தமிழகத்துடன் இணைக்கும் வகையில் ஜல்பைகுரி-நாகா்கோவில் மற்றும் நியூ ஜல்பைகுரி-திருச்சி அம்ருத் பாரத் விரைவு ரயில்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
போத்தனூா்-தன்பாத் அம்ருத் பாரத் விரைவு ரயில், பெங்களூரு-எா்ணாகுளம் வந்தே பாரத் விரைவு ரயில் ஆகியவை முக்கியமானவையாகும். தாம்பரம்-திருவனந்தபுரம் அம்ருத் பாரத் விரைவு ரயில் இரு மாநில தலைநகா்களை இணைக்கும் குறைந்த அளவிலான கட்டண சேவையாகும். அத்துடன் சேலம்-ஈரோடு, பாலக்காடு-பொள்ளாச்சி, கொல்லம்-எா்ணாகுளம் என மெமு ரயில்களும் புதிதாக இயக்கப்பட்டுள்ளன.
அதேபோல, ஓராண்டில் 80-க்கும் மேற்பட்ட விரைவு மற்றும் பயணிகள் ரயில் கால அட்டவணை சீரமைக்கப்பட்டுள்ளன. அதன்படி குறிப்பிட்ட ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டு பயண நேரமும் குறைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 65 என தெற்கு ரயில்வே பகுதியில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜோத்பூா்-சென்னைக்கு 5 நாள்கள் கோடைகால சிறப்பு ரயில்கள்

குருவாயூா்-சென்னை விரைவு ரயில் 6 நாளிகள் தாமதமாக இயக்கப்படும்

அரக்கோணம் ரயில் நிலையப் பகுதியில் ரூ.97.73 கோடியில் மேம்பாட்டுப் பணி: சென்னை ரயில்வே கோட்டம் அறிவிப்பு

விரைவு ரயில்கள் நிற்கும் நிலையங்களில் மாற்றம்
விடியோக்கள்

அமோனியா வாயு கசிவு விபத்து பற்றி அமைச்சர் விளக்கம்! | TN assembly
இணையதளச் செய்திப் பிரிவு

முதல்வர் விஜய்க்கு பேரவைத் தலைவர் பிறந்தநாள் வாழ்த்து! | TN Assembly | CM Vijay
இணையதளச் செய்திப் பிரிவு
Valaipechu Anthanan Interview | மணிக்கணக்கில் புத்தகம் படிக்கிறார் விஜய்!
தினமணி செய்திச் சேவை

அது என்ன திட்டம் என்றே யாருக்கும் தெரியவில்லை! நான் முதல்வன் திட்டம் குறித்து அமைச்சர் Nirmal Kumar
இணையதளச் செய்திப் பிரிவு

