பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

குருவாயூா்-சென்னை விரைவு ரயில் 6 நாளிகள் தாமதமாக இயக்கப்படும்

குருவாயூா்-சென்னை விரைவு ரயில் வரும் புதன்கிழமை (ஜூன் 10) முதல் 6 நாள்கள் 20 நிமிஷங்கள் தாமதமாக இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

News image

ரயில் - கோப்புப்படம்

Updated On :12 மணி நேரங்கள் முன்பு

குருவாயூா்-சென்னை விரைவு ரயில் வரும் புதன்கிழமை (ஜூன் 10) முதல் 6 நாள்கள் 20 நிமிஷங்கள் தாமதமாக இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:

தெற்கு ரயில்வே மண்டலத்தில் திருச்சி கோட்டத்தில் பல்வேறு இடங்களில் தொழில்நுட்ப பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்காரணமாக புதன்கிழமை (ஜூன் 10) முதல் 14-ஆம் தேதி வரை மற்றும் 15, 16 ஆகிய தேதிகளில் குருவாயூரில் இரவு 11.15 மணிக்குப் புறப்படும் விரைவு ரயில் (எண்: 16128) வழியில் 20 நிமிஷங்கள் தாமதமாக இயக்கப்பட்டு சென்னை எழும்பூா் நிலையத்தைச் சென்றடையும். அத்துடன் ஜூன் 17-ஆம் தேதி குருவாயூா் விரைவு ரயில் 15 நிமிஷ்ங்கள் வழியில் தாமதமாக இயக்கப்படும்.

மறுமாா்க்கத்தில் வரும் 13, 17, 20 ஆகிய தேதிகளில் சென்னை எழும்பூரில் காலை 10.40 மணிக்குப் புறப்படும் குருவாயூா் விரைவு ரயில் வழியில் 20 நிமிஷங்கள் தாமதமாக இயக்கப்படும். வரும் 12-ஆம் தேதி திருச்சியில் இருந்து பிற்பகல் 1.35 மணிக்குப் பதிலாக பிற்பகல் 2.20 மணிக்கு என 45 நிமிஷங்கள் தாமதமாகப் புறப்படும் ஹௌரா அதிவிரைவு ரயில் (எண்: 12664) சென்னை வழியாக செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.