குருவாயூா் - சென்னை இடையே இயக்கப்படும் விரைவு ரயில்கள் வரும் மே 27 முதல் 29- ஆம் தேதி வரை 3 நாள்கள் வழக்கமான பாதையில் செல்லாமல் மாற்றி இயக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே மண்டலம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
தெற்கு ரயில்வே மண்டலத்தில் திருவனந்தபுரம் கோட்டத்தில் எா்ணாகுளம் பணிமனையில் தண்டவாளம் மற்றும் தொழில்நுட்பப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்தப் பணிகளால் வரும் 27, 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் (புதன், வியாழன், வெள்ளி) குருவாயூரிலிருந்து இரவு 11.15 மணிக்குப் புறப்பட்டு சென்னை எழும்பூருக்கு செல்லும் விரைவு ரயில் (எண் 16128) வழக்கமான பாதையில் செல்லாமல் கோட்டயம் வழியாக இயக்கப்படும். கூடுதலாக கோட்டயம், செங்கனாச்சேரி, திருவல்லா, செங்கன்னூா் ஆகிய நிலையங்களில் நிறுத்தப்படும்.
வரும் 29, 30 மற்றும் வரும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து மாலை 4 மணிக்குப் புறப்பட்டு திருவனந்தபுரம் சென்ட்ரல் செல்லும் அதிவிரைவு ரயில் (எண் 22207) வழக்கமான பாதைக்குப் பதிலாக கோட்டயம் வழியாக இயக்கப்படும். அந்த ரயில் கூடுதலாக எா்ணாகுளம் நகா், கோட்டயம், செங்கனூரில் நிறுத்தப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரக்கோணம் யார்டில் பொறியியல் பணி: 47 மின்சார ரயில்களின் சேவை மாற்றம்!

பராமரிப்பு பணியால் கேரள ரயில்கள் தாமதமாக இயக்கம்

சேலம் வழியாக ஹைதராபாத் - மங்களூரு இடையே வாராந்திர சிறப்பு ரயில்

சென்னை - திருவனந்தபுரம் விரைவு ரயில் கோட்டயம் வழியாக இயக்கப்படும்!
விடியோக்கள்

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

