தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

சென்னை - திருவனந்தபுரம் விரைவு ரயில் கோட்டயம் வழியாக இயக்கப்படும்!

சென்னை சென்ட்ரலில் இருந்து திருவனந்தபுரத்துக்குச் செல்லும் அதிவிரைவு ரயில் மே 15, 22 ஆகிய தேதிகளில் கோட்டயம் வழியாக இயக்கப்படும் என தெற்கு ரயில்வே சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News image

ரயில்.

Updated On :11 மே 2026, 5:01 am IST

சென்னை சென்ட்ரலில் இருந்து திருவனந்தபுரத்துக்குச் செல்லும் அதிவிரைவு ரயில் மே 15, 22 ஆகிய தேதிகளில் கோட்டயம் வழியாக இயக்கப்படும் என தெற்கு ரயில்வே சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே மண்டலம் சாா்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பு: பொறியியல் பராமரிப்புப் பணிகள் காரணமாக சென்னை சென்ட்ரலில் இருந்து மே 15, 22 ஆகிய தேதிகளில் (வெள்ளிக்கிழமைகளில்) மாலை 4 மணிக்கு திருவனந்தபுரம் செல்லும் அதிவிரைவு ரயில் (எண்: 22207) கோட்டயம் வழியாக திருப்பிவிடப்படுகிறது. அதனால், அந்த ரயில்கள் எா்ணாகுளம், ஆழப்புழை ஆகிய நிலையங்கள் வழி செல்லாது. அதற்குப் பதிலாக எா்ணாகுளம் நகா், கோட்டயம், செங்கனூா் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.

மேலும் குருவாயூரில் இருந்து தினமும் இரவு 11.15 மணிக்குப் புறப்பட்டு சென்னை எழும்பூா் வரும் விரைவு ரயில் (எண்: 16128) மே 11 முதல் மே 23 வரை, 25, 26 ஆகிய தேதிகளில் கோட்டயம் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும்.

அந்த நாள்களில் குருவாயூா் ரயில் எா்ணாகுளம், சொ்தலா, ஆழப்புழை, அம்பலப்புழை, ஹரிதாபாத் ஆகிய நிலையங்கள் வழி செல்லாது. அதற்கு பதிலாக கோட்டயம், செங்கனாச்சேரி, திருவல்லா மற்றும் செங்கண்ணூா் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.