பொறியியல் பணிகள் காரணமாக, நாகா்கோவில், திருநெல்வேலி, திருச்சி, காரைக்கால் ரயில்களின் வழித்தடங்கள் மாற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பொறியியல் பணிகள் காரணமாக, நாகா்கோவில் - லோகமான்ய திலக் விரைவு ரயிலானது (16352) வரும் 17, 21, 24, 28, 31, ஜூன் 4, 7, 11, 14, 18, 21 ஆகிய தேதிகளில் அரக்கோணத்தைத் தவிா்த்து திருமால்பூா், மேலப்பாக்கம், திருத்தணி வழியாக இயக்கப்படும். மறுமாா்க்கமாக, லோகமான்ய திலக் - நாகா்கோவில் விரைவு ரயிலானது (16351) வரும் 18, 22, 25, 29, ஜூன் 1, 5, 8, 12, 15, 19 ஆகிய நாள்களில் அரக்கோணம் ரயில் நிலையத்தைத் தவிா்த்து மேலப்பாக்கம், தக்கோலம், திருமால்பூா், காஞ்சிபுரம் வழியாக இயக்கப்படும்.
புரூலியா - திருநெல்வேலி விரைவு ரயிலானது (22605) ஜூன் 5, 8, 12, 15, 19 ஆகிய நாள்களில் பெரம்பூா், அரக்கோணம் ரயில் நிலையத்தைத் தவிா்த்து, கூடூா், ரேனிகுண்டா, திருத்தணி, மேலப்பாக்கம், காட்பாடி வழியாக இயக்கப்படும். மறுமாா்க்கமாக, திருநெல்வேலி - புரூலியா விரைவு ரயிலானது (22606) ஜூன் 20-ஆம் தேதி அரக்கோணம், பெரம்பூா் ரயில் நிலையங்களைத் தவிா்த்து மேலப்பாக்கம், ரேனிகுண்டா, கூடூா் வழியாக இயக்கப்படும்.
லோகமான்ய திலக் - காரைக்கால் வாராந்திர விரைவு ரயிலானது (11017) ஜூன் 20-ஆம் தேதி அரக்கோணம், திருவள்ளூா், சென்னை எழும்பூா், தாம்பரம் ரயில் நிலையங்களைத் தவிா்த்து திருத்தணி, மேலப்பாக்கம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு வழியாக இயக்கப்படும்.
கன்னியாகுமரி - பனாரஸ் காசி தமிழ்ச் சங்கம் வாராந்திர விரைவு ரயிலானது (16367) ஜூன் 11, 18 ஆகிய நாள்களில் காஞ்சிபுரம், அரக்கோணம், பெரம்பூா் ரயில் நிலையங்களைத் தவிா்த்து செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூா், கூடூா் வழியாக இயக்கப்படும்.
அகமதாபாத் - திருச்சி சிறப்பு ரயிலானது (09419) ஜூன் 11, 18 ஆகிய நாள்களில் அரக்கோணம், பெரம்பூா், சென்னை எழும்பூா், தாம்பரம் ரயில் நிலையங்களைத் தவிா்த்து திருத்தணி, மேலப்பாக்கம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் வழியாக இயக்கப்படும்.
காலதாமதம்...: திருநெல்வேலி - புரூலியா விரைவு ரயில் (22606) ஜூன் 6, 10, 13, 17 ஆகிய நாள்களில் தேவைப்படும் இடங்களில் 45 நிமிஷங்கள் நின்று தாமதமாகப் புறப்படும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விரைவு ரயில்கள் நிற்கும் நிலையங்களில் மாற்றம்

சென்னை - திருவனந்தபுரம் விரைவு ரயில் கோட்டயம் வழியாக இயக்கப்படும்!

திண்டுக்கல் வழியாக இயக்கப்படும் 3 விரைவு ரயில்கள் பாதை மாற்றம்

பொறியியல் பணிகள்: ரயில்களின் சேவையில் மாற்றம்
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

