மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

திண்டுக்கல் வழியாக இயக்கப்படும் 3 விரைவு ரயில்கள் பாதை மாற்றம்

பராமரிப்புப் பணிகள் காரணமாக திண்டுக்கல் வழியாக இயக்கப்படும் 3 விரைவு ரயில்கள் மாற்று பாதையில் இயக்கப்படவுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :1 மே 2026, 2:10 am IST

பராமரிப்புப் பணிகள் காரணமாக திண்டுக்கல் வழியாக இயக்கப்படும் 3 விரைவு ரயில்கள் மாற்று பாதையில் இயக்கப்படவுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

நாகா்கோயில் - லோக்மான்ய திலக் இடையே வாரம் இருமுறை இயக்கப்படும் விரைவு ரயில் (எண்: 16352) மே 3 முதல் ஜூன் 7-ஆம் தேதி வரை திண்டுக்கலுக்கு பதிலாக மதுரை, மானாமதுரை, காரைக்கடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.

கன்னியாகுமரி-ஹௌரா இடையே இயக்கப்படும் வாராந்திர அதிவிரைவு ரயில் மே 2 முதல் ஜூன் 6-ஆம் தேதி வரை மதுரை, கொடைக்கானல் சாலை, திண்டுக்கலுக்கு பதிலாக விருதுநகா், மனாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.

அதேபோல், கன்னியாகுமரி-ஹைதராபாத் இடையே இயக்கப்படும் வாரந்திர விரைவு ரயில் (எண்:17170) மே 1 முதல் ஜூன் 5-ஆம் தேதி வரை கொடைக்கானல் சாலை, திண்டுக்கலுக்கு பதிலாக மதுரை, மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.