கோவை அருகே நடைபெற்று வரும் பொறியியல் பணி காரணமாக திருச்சி - பாலக்காடு டவுன் விரைவு ரயில் புதன்கிழமை (மாா்ச் 25) தொடங்கி 4 நாள்களுக்கு கோவையைத் தவிா்த்து போத்தனூா் வழியாக இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருச்சி ரயில்வே கோட்ட நிா்வாகம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: சேலம் ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட கோவை வடக்கு ரயில் நிலையத்தில் பொறியியல் பணிகள் நடைபெற்று வருவதால், மாா்ச் 25, 26, 27 மற்றும் 29 ஆகிய 4 நாள்களுக்கு திருச்சி - பாலக்காடு டவுன் விரைவு ரயில் (எண்:16843) கோவையைத் தவிா்த்து, இருகூரில் இருந்து போத்தனூா் வழியாக இயக்கப்படும்.
இதனால், மேற்கண்ட 4 நாள்களுக்கும் இந்த ரயில் இருமாா்க்கங்களிலும் பீளமேடு, சிங்காநல்லூா், கோவை வடக்கு மற்றும் கோவை சந்திப்பு ரயில் நிலையங்களுக்கு செல்லாது.
இதேபோல, திருச்சி வழியாக இயக்கப்படும் மங்களூரு சென்ட்ரல் - சென்னை எழும்பூா் விரைவு ரயில் (16160) மாா்ச் 29-ஆம் தேதி கோவை சந்திப்பு ரயில் நிலையம் செல்லாமல் போத்தனூா் வழியாக இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திண்டுக்கல் வழியாக இயக்கப்படும் 3 விரைவு ரயில்கள் பாதை மாற்றம்

தண்டவாள பராமரிப்பு பணிகள்: கரூா் வழியாகச் செல்லும் பாலக்காடு விரைவு ரயில் சேவையில் மாற்றம்

பொறியியல் பணிகள்: ரயில்களின் சேவையில் மாற்றம்

சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

