சென்செக்ஸ் 172 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 24,250 க்குக் கீழே நிறைவு!!பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறைமாதம் ஒரு நாள் 'புத்தகப்பை இல்லா நாள்': பள்ளிக் கல்வித் துறைபள்ளிகளில் ஓடி விளையாடு என்ற திட்டத்தின் மூலம் நாள்தோறும் விளையாடலாம்: பள்ளிக் கல்வித் துறைபரந்தூர் திட்டத்தைக் கைவிடுவது அரசுக்கு பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தும்! உதயநிதிபள்ளிகளுக்கு 3 வகையான ஸ்டிக்கர் ஒட்டப்படும்: ஆதவ் அர்ஜுனா பேச்சுகொளத்தூர் தொகுதியில் வி.எஸ். பாபு வெற்றியை எதிர்த்து மு.க. ஸ்டாலின் வழக்கு! பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும்: இபிஎஸ் பரந்தூர் விமான நிலைய அறிவிப்பு! திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புமத்திய பாதுகாப்பு அமைச்சக பெண் அதிகாரி கருவுற்றிருந்த நிலையில் மரணம்! அதிர்ச்சி காரணம்ஓணம் பண்டிகை: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு கட்டணமில்லா மகளிர் பேருந்து திட்டம் எப்போது? பேரவையில் அறிவித்தார் முதல்வர் விஜய்!பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு

அரசியல் வீம்புக்காக தமிழகத்தின் வளர்ச்சியை முடக்காதீர்கள்: முதல்வருக்கு பாஜக வலியுறுத்தல்!

அரசியல் வீம்புக்காக தமிழகத்தின் வளர்ச்சியை முடக்காதீர்கள் என பாஜக கருத்து தெரிவித்துள்ளது பற்றி...

Nainar nagendran makes uncivilized remarks about Chief Minister Vijay

முதல்வர் விஜய் | நயினார் நாகேந்திரன் - கோப்புப் படம் | x

Published On :24 ஆகஸ்ட் 2026, 3:54 pm IST

உங்களின் அரசியல் வீம்புக்காக தமிழகத்தின் வளர்ச்சியை முடக்காதீர்கள் முதல்வர் விஜய் அவர்களே! என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்படுவதாக முதல்வர் விஜய் இன்று (ஆக. 24) சட்டப்பேரவையில் அறிவித்தார்.

இதுகுறித்து நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

உங்களின் அரசியல் வீம்புக்காக தமிழகத்தின் வளர்ச்சியை முடக்காதீர்கள் முதல்வர் விஜய் அவர்களே!

விமான நிலையத்திற்கான மாற்று இடத்தை தேர்வு செய்யாமல், பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை கைவிடுவதாக நீங்கள் சட்டப்பேரவையில் அறிவித்திருப்பது, தமிழகத்தின் வளர்ச்சியை பின்னோக்கி இழுப்பதற்கான ஏற்பாடு. பரந்தூர் விமான நிலையத்திற்கு மாற்று இடம் வேண்டி, இதுவரை எந்த கோரிக்கையும் மத்திய அரசிடம் வைக்காமல், எந்த இடத்தை தேர்வு செய்யப் போகிறோம் என்ற தெளிவும் இல்லாமல், எதற்காக இந்த அவசர முடிவு?

விமான நிலையத்திற்கான இடத்தை புதிதாக தேர்வு செய்வது என்பது அத்தனை எளிதா? சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் ஆய்வுகள் மேற்கொண்டு, பயணப் போக்குவரத்து, மணலின் தன்மை, தேவை மற்றும் கோரிக்கை என பல அம்சங்களையும் கோணங்களையும் ஆராய்ந்ததன் அடிப்படையில் தான் புதிய விமான நிலையம் அமைக்க பரந்தூர் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆனால், தேர்தலின் போது பரந்தூரை நீங்கள் தேர்தல் பரப்புரைக் களமாக பயன்படுத்திக் கொண்ட ஒரே காரணத்திற்காக, விமான நிலையம் அமைப்பதற்கான மிகப்பெரிய செயல்பாட்டை மீண்டும் முதலில் இருந்து துவங்க நீங்கள் முடிவு செய்திருப்பது, நேர விரயம், பண விரயம், மற்றும் வளங்களின் விரயம்.

உங்கள் தனிப்பட்ட அரசியல் ஆதாயத்திற்காக தமிழகத்தின் வளர்ச்சிக்கு நீங்கள் தடை போடுவது கண்டனத்திற்குரியது. அதுமட்டுமன்றி, பரந்தூர் விமான நிலையம் அமைக்க ஏற்கெனவே கையகப்படுத்தப்பட்ட1,700 ஏக்கர் நிலங்களை உங்கள் அரசு என்ன செய்யப் போகிறது? நிலம் கையகப்படுத்தல் சட்டத்தின் படி, இந்த நிலங்களை விமான நிலையம் தவிர வேறு எதற்கும் பயன்படுத்தக் கூடாது என்பது உங்களுக்கு தெரியாதா?

மேலும் இழப்பீட்டுத் தொகை பெற்றுக் கொண்டு தங்கள் நிலங்களை அரசுக்கு கொடுத்த மக்களுக்கு உங்கள் அரசு என்ன பதில் வைத்திருக்கிறது? எனவே, ஆரம்பம் முதலே எங்களின் கேள்வி ஒன்றே ஒன்று தான், தவெக அரசுக்கு பரந்தூரில் விமான நிலையம் அமைவது பிரச்னையா அல்லது தமிழகத்திற்கு ஓர் புதிய விமான நிலையம் கிடைப்பதில் பிரச்சினையா? பதிலளியுங்கள் ஜோசப் விஜய் அவர்களே! என நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

நயினார் நாகேந்திரனின் எக்ஸ் பதிவு.

நயினார் நாகேந்திரனின் எக்ஸ் பதிவு. - படம் - எக்ஸ்

Summary

"Chief Minister Vijay, do not stall Tamil Nadu's development for the sake of your political obstinacy!" urged BJP State President Nainar Nagendran.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.