
பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!!
பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படுகிறது என்று பேரவையில் அறிவித்தார் முதல்வர் விஜய்

முதல்வர் விஜய் - ஏஎன்ஐ
சென்னையை அடுத்த பரந்தூர் பகுதியில் அமையவிருந்த இரண்டாவது விமான நிலைய திட்டம் கைவிடப்படுவதாக சட்டப்பேரவையில் இன்று முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை இன்று காலை கூடியதும், அவை விதி 110-ன் கீழ் பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் விஜய் இன்று வெளியிட்டார்.
அப்போது பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படுவது குறித்த அறிவிப்பையும் அவர் வெளியிட்டார். அது குறித்து பேசிய முதல்வர் விஜய், சென்னையில் உள்ள மீனம்பாக்கம் விமான நிலையம் தற்போது ஆண்டுக்கு 30 மில்லியன் பயணிகளை கையாளும் திறனைக் கொண்டுள்ளது.
வளர்ந்து வரும் சென்னை மாநகரின் தேவையைக் கருத்தில் கொண்டும், பயணிகள் வசதி மற்றும் தொழில் தேவையை கருத்தில் கொண்டு சரக்கு விமான சேவையை ஊக்குவிக்கவும் புதிய விமானம் தேவை என்ற நிலை உள்ளது.
ஆனால், முந்தைய அரசு விவசாயிகள் பாதிக்கும் வகையில் குடியிருப்புகள் அதிகம் அகற்றும் வகையில் புதிய விமான நிலையத்தை அமைக்கும் முயற்சியை மேற்கொண்டது.
ஏகனாபுரம் மற்றும் இதர கிராம மக்கள் நடத்திய போராட்டங்களை நான் நேரில் சென்று பார்த்தேன், அவர்களுக்கு துணை நின்றேன்.
எனவே, விவசாயிகள் பாதிக்காத, குடியிருப்புகள் அகற்றாத வகையில் விமான நிலையம் அமைய வேண்டும் என்று தமிழக அரசு முடிவெடுத்து, பரந்தூரில் சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைக்க எடுக்கப்பட்டு வந்த நடவடிக்கைகள் இந்த அரசால் கைவிடப்படுகிறது என்று இன்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
மேலும், தற்போது, சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் விரிவுபடுத்தப்படும், விவசாய நிலங்கள் அதிகம் பாதிக்கப்படாத வகையில் இடம் பரிசீலனை செய்யப்பட்டு அங்கு புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
Summary
Parandur Airport project dropped cm Vijay announces
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





