
பரந்தூர் திட்டத்தைக் கைவிடுவது அரசுக்கு பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தும்! உதயநிதி
பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவதற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் எதிர்ப்பு...

கோப்புப் படம் - IANS
பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவது அரசுக்கு பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தும் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்படுவதாக முதல்வர் விஜய் இன்று சட்டப்பேரவையில் அறிவித்தார். இதற்கு திமுக எதிர்ப்பு தெரிவித்து அவையில் இருந்து வெளிநடப்பு செய்தது.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலினும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
"தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை ரத்து செய்திருக்கும் சோஃபா மாடல் அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
சென்னையில் பெருகி வரும் விமானப் பயணிகளின் எண்ணிக்கை மற்றும் விமான சரக்கு போக்குவரத்து - எதிர்காலத் தேவை போன்றவற்றின் அடிப்படையில், சென்னைக்கு 2-ஆவது விமான நிலையம் அவசியம் என்பதை உணர்ந்து, பரந்தூர் விமான நிலையத் திட்டம் திமுக அரசால் உருவாக்கப்பட்டது.
இத்திட்டத்திற்கு இந்திய விமான நிலைய ஆணையம், மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் உள்ளிட்டவை ஆய்வு செய்து அனுமதி தந்துவிட்டன.
இத்தகைய கடினமான அனுமதிகளைப் பெறுவது, கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்குச் சந்தை மதிப்பை விட 3 மடங்கு அதிகமான இழப்பீடு, மறு குடியமர்வு போன்ற முக்கியமான பணிகள் அனைத்தும் மு.க. ஸ்டாலின், முதல்வராக இருந்த போதே நடைபெற்றன.
இதற்காக அரசுத் தரப்பில் பெரும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இவையெல்லாம் நடந்த பிறகு, அற்ப அரசியல் காரணங்களுக்காக திட்டத்தையே கைவிடுகிறேன் என்று சொன்னால், அது அரசிற்கு பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தும்.
பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை நிறுத்துவதால், சென்னையைச் சுற்றியுள்ள தொழில் நிறுவனங்கள் அண்டை மாநிலங்களை நோக்கி வெளியேறும் அபாயமும், புதிய நிறுவனங்கள் சென்னைக்கு வர தயங்கும் சூழலும் எழுந்துள்ளன.
ஆகவே, தமிழ்நாட்டு இளைஞர்களின் எதிர்காலத்தையும் - தமிழ்நாட்டின் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு, பரந்தூர் விமான நிலைய பணிகளைத் தொடர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
தமிழà¯à®¨à®¾à®à¯à®à®¿à®©à¯ வளரà¯à®à¯à®à®¿à®à¯à®à®¾à®© பரநà¯à®¤à¯à®°à¯ விமான நிலà¯à®¯à®¤à¯à®¤à®¿à®à¯à®à®¤à¯à®¤à¯ ரதà¯à®¤à¯ à®à¯à®¯à¯à®¤à®¿à®°à¯à®à¯à®à¯à®®à¯ Sofa Model à®à®°à®à¯ வனà¯à®®à¯à®¯à®¾à®à®à¯ à®à®£à¯à®à®¿à®à¯à®à®¿à®±à¯à®©à¯.
— Udhay (@Udhaystalin) August 24, 2026
à®à¯à®©à¯à®©à¯à®¯à®¿à®²à¯ பà¯à®°à¯à®à®¿ வரà¯à®®à¯ விமானப௠பயணிà®à®³à®¿à®©à¯ à®à®£à¯à®£à®¿à®à¯à®à¯ மறà¯à®±à¯à®®à¯ விமான à®à®°à®à¯à®à¯ பà¯à®à¯à®à¯à®µà®°à®¤à¯à®¤à¯ - à®à®¤à®¿à®°à¯à®à®¾à®²à®¤à¯ தà¯à®µà¯ பà¯à®©à¯à®±à®µà®±à¯à®±à®¿à®©à¯ à®à®à®¿à®ªà¯à®ªà®à¯à®¯à®¿à®²à¯, à®à¯à®©à¯à®©à¯à®à¯à®à¯ 2-à®à®µà®¤à¯ விமானâ¦
Summary
Abandoning the Parandur project cause massive financial loss to the govt: Udhayanidhi
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






