
கொளத்தூர் தொகுதியில் வி.எஸ். பாபு வெற்றியை எதிர்த்து மு.க. ஸ்டாலின் வழக்கு!
கொளத்தூர் தொகுதியில் தோல்வியடைந்ததை எதிர்த்து, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
மு.க. ஸ்டாலின் | வி.எஸ். பாபு - கோப்புப் படம்
கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ். பாபு வெற்றி பெற்றதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.க. ஸ்டாலின் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், சென்னை கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி. எஸ். பாபு வெற்றி பெற்றார். தமிழக முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் தோல்வியடைந்தார். இந்த நிலையில், விஎஸ் பாபு வெற்றி பெற்றதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.க. ஸ்டாலின் வழக்கு தொடர்ந்து உள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தொடர்ந்துள்ள வழக்கில், நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் திமுக சார்பில போட்டியிட்டதில் தவெக சார்பில் போட்டியிட்ட விஎஸ் பாபு வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார் என தெரிவித்துள்ளார்.
கொளத்தூர் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்களை ஆய்வு செய்ய தேர்தல் ஆணையத்தின் அனுமதி கேட்கப்பட்டதாகவும், அனுமதி பெற்றவுடன் அதன் அடிப்படையில் மூத்த வழக்குரைஞர் என்.ஆர். இளங்கோ தலைமையிலான வழக்குரைஞகள் சிந்தாதிரிப்பேட்டையில் வைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு இயந்திரங்களை ஆய்வு செய்ததாக தெரிவித்துள்ளார்.
குறிப்பாக வாக்கு பதிவு மையங்களான 1, 17, 28, 32, 75, 78, 79, 84 ,87, 112, 122, 157, 170 உள்ளிட்ட வாக்கு சாவடிகளில் வைக்கப்பட்டிருந்த விவி பேட், வாக்குப்பதிவு இயந்திரம், கண்ட்ரோல் யூனிட் ஆகியவைகள் ஆய்வு செய்ததாக சுட்டிக்காட்டி உள்ளார்.
அப்போது பெல் நிறுவனத்தினால் நியமிக்கப்பட்ட பொறியாளர் உடன் இருந்தார் என்றும் நூறு சதவீத வி வி பேட் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் ஒப்பிட்டு பார்க்கப்பட்டது என தெரிவித்துள்ளார்.
இதில் ஆறு வாக்குச் சாவடிகளில் பதிவான வாக்குகள் மற்றும் விவிபேடுகளின் ஒப்புகை சீட்டுகளை ஒப்பிட்டுப் பார்த்ததில் பல்வேறு முறைகேடுகள் கண்டறியப்பட்டதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து அங்கீகரிக்கப்பட்ட தேர்தல் பிரதிநிதி சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிக்கு கடிதம் எழுதினார் என்றும் தெரிவித்துள்ளார்.
தேர்தல் இயந்திரம் தொடர்பாக புகார் செய்வது தொடர்பான வெளிப்படையான ஒரு நடைமுறையை அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
பல வாக்குசாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டு முறைகேடு நடந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
குறிப்பாக பல வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஹார்டுவேர் என்று சொல்லக்கூடிய மென்பொருள் கோளாறு ஏற்பட்டதையும் அவர் தெரிவித்துள்ளார். தொழில்நுட்பகோளாறுகளை சுட்டிக்காட்டிய பின்பும் சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரி உரிய வழிகாட்டு நெறிமுறைகளின்படிதான் சோதனை மற்றும் சரிபார்த்தல் நடைபெற்றதாக தெரிவித்துள்ளார்.
எனவே பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதால் அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வி வி பேடுகளை சரி பார்க்க வேண்டும், மேலும் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்க வேண்டும், தான் வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலின் தொடர்ந்த இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
Summary
M.K. Stalin files a case challenging V.S. Babu's victory in the Kolathur constituency!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




