திருச்சி மலைக்கோட்டை பகுதியில் உள்ள தாயுமானசுவாமி கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை திருக்கல்யாணம் விழா கோலாகலமாக நடைபெற்றது.
சித்திரை மாதத்தையொட்டி ஆண்டுதோறும் நடைபெறும் இத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி பல்வேறு வாகனங்களில் சுவாமி-அம்பாள் வீதி உலா என நடைபெறுவதும் வழக்கம்.
இந்த விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான திருக்கல்யாணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தாயுமானசுவாமி மற்றும் மட்டுவார் குழலம்மை திருக்கல்யாணம் பக்தர்கள் முன்னிலையில் விமர்சையாக நடத்தப்பட்டது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து வழிபட்டனர். கோயில் வளாகம் முழுவதும் ஆன்மிக உற்சாகம் நிலவியதுடன், மேளதாளங்கள் முழங்க திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.
மேலும் விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டதுடன், பக்தர்கள் “சிவ சிவ”, “தாயுமான ஈசா” என கோஷங்கள் எழுப்பி பக்தி உணர்வுடன் வழிபட்டனர்.
சித்திரைத் திருவிழாவின் தொடர்ச்சியாக அடுத்தடுத்த நாட்களில் தேரோட்டம் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Summary
Thirukalyanam was held with great splendor on Sunday as part of the Chithirai festival at the Thayumanaswamy Temple located in the Trichy malaikottai area.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காஞ்சிபுரம் கச்சபேசுவரா் கோயில் திருக்கல்யாணம்

திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயில் சித்திரை தேரோட்டம்! திரளென பக்தர்கள் பங்கேற்பு!

திருச்சி தாயுமானசுவாமி கோயிலில் சித்திரைத் தேரோட்டம்!

திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயில் சித்திரை தேரோட்டம்!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை
