கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயில் சித்திரை தேரோட்டம்!

திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயில் சித்திரைத் தேரோட்டம் புதன்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது குறித்து...

News image

திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயில் சித்திரைத் தேரோட்டம் - டிஎன்எஸ்

Updated On :29 ஏப்ரல் 2026, 10:50 am IST

திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயில் சித்திரைத் தேரோட்டம் புதன்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது. ஓம் நம்சிவாய என்ற பக்தி முழக்கத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்.

தென்கயிலாயம் எனப்போற்றப்படுவதும், 274-சைவத்தலங்களுக்குள் ஈடுஇணையற்றதாகவும் சிறப்புப் பெற்ற, திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி திருக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும், இங்கு ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும்.

அதன்படி, சித்திரை திருவிழா கடந்த 21 ஆம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அதனைத்தொடர்ந்து அம்பாளும், தாயுமானவர்(சிவபெருமானும்) காமதேனு, ரிஷபம், யானை, தங்ககுதிரை, நந்திகேசர், கைலாசபர்வதம், அன்னம் உள்ளிட்ட பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி வந்தனர்.

தொடர்ந்து கடந்த 25 ஆம் தேதி செட்டிப்பெண் பிரசவம் பார்த்தல் வைபவமும், 26 ஆம் தேதி திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சியும் நடைபெற்று பக்தர்களுக்கு காட்சியளித்து வந்தார்.

விழாவின் முக்கிய நிகழ்வான சித்திரை தேரோட்டம் புதன்கிழமை காலை 6.30 மணிக்கு தொடங்கியது,

மலைக்கோட்டை தாயுமானசுவாமி, அலங்கரிக்கப்பட்ட மிகப்பெரிய திருத்தேரில் அம்பாளுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

மற்றொரு தேரில் மட்டுவார் குழலம்மை தாயார் எழுந்தருளினார். முன்னதாக சண்டிகேஷ்வரர் பரிவார மூர்த்திகள் சிறிய தேரில் எழுந்தருளினர்.

தொடர்ந்து பலஆயிரக்கணக்கான பக்தர்கள் ஓம் நமசிவாய, சிவ சிவா என்ற முழக்கத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.

இதில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். மேளதாளங்கள் முழங்க வாண வேடிக்கையுடன் வெகு விமரிசையாக தேரோட்டம் நடைபெற்றது. தேர் செல்லும் பாதைகளில் ஆங்காங்கே பக்தர்களுக்கு பாலும், குளிர்பானங்களும், அன்னதானமும் வழங்கப்பட்டது.

Summary

Trichy Malaikottai Thayumanaswami Chariot Festival

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.