தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் இன்று முதல் மூன்று நாள்களுக்கு மூடப்படும் என அறிவித்துள்ளது.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப். 23 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவிருக்கிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4ஆம் தேதி எண்ணப்படவிருக்கின்றன.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி புதுச்சேரியில் 3 நாள்கள் மதுக்கடைகள் மூடப்பட்டதால் நேற்று இரவும், இன்று காலையும் மதுக்கடைகளில் கூட்டம் கூட்டமாகக் குவிந்து மதுபானங்களை வாங்கி சென்றார்கள் மது பிரியர்கள்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை மறுநாள் நடைபெற உள்ள நிலையில், வாக்குப்பதிவை முன்னிட்டு தமிழகத்தையொட்டியுள்ள புதுச்சேரி மாநிலத்தில் உள்ள மதுக்கடைகள் அனைத்தும் இன்று முதல் 3 நாள்கள் மூட வேண்டும் என புதுச்சேரி கலால்துறை உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் இன்று காலை 10 மணி முதல் 23-ம் தேதி இரவு வரை மூடப்படுகின்றது.
இதையொட்டி நேற்று மாலையும், இன்று காலையும் புதுச்சேரியில் உள்ள மதுக்கடைகளில் மது பிரியர்கள் கூட்டம் அலைமோதியது. பலரும் அதிக அளவிலான மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனர். மூன்று நாள்கள் மதுக்கடைகள் மூடப்படுவதால் முன்னதாக மது பிரியர்கள் மதுபானக்கடைகளில் கூட்டம் கூட்டமாகக் குவிந்தது திருவிழா போல் காட்சியளித்தது.
Summary
It has been announced that TASMAC outlets will remain closed for the next three days in view of the Tamil Nadu Legislative Assembly elections.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கும்பகோணத்தில் துணை ராணுவப் படையினரின் கொடி அணிவகுப்பு

தமிழகத்தில் ஒரே நாளில் ரூ. 400 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை!

புதுச்சேரியில் எல்லையோர மதுக்கடைகள் 3 நாள்கள் மூடல்

தமிழக பேரவைத் தேர்தலை நடத்த எத்தனை கோடி ஒதுக்கீடு? அர்ச்சனா பட்நாயக் தகவல்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

