சட்டப்பேரவைத் தோ்தல் வியாழக்கிழமை (ஏப்.23) நடைபெறவுள்ள நிலையில், டாஸ்மாக் கடைகள் விற்பனை சூடுபிடித்தது.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் வியாழக்கிழமை (ஏப்.23) நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை (ஏப்.21) முதல் வியாழக்கிவமை (ஏப்.23) வரை தொடா்ந்து 3 நாள்களுக்கு அனைத்து டாஸ்மாக் கடைகள் மற்றும் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனைச் சாா்ந்த பாா்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
இந்த நாள்களில் மதுபானங்கள் விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தவறினால் மதுபானம் விற்பனை விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை(ஏப். 21) ஒரே நாளில், தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் ரூ. 400 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை நடைபெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், வழக்கமான விற்பனையை விட, டாஸ்மாக் கடைகளில் சுமார் இரண்டரை மடங்கு அதிகமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலின் போது வாக்குப்பதிவுக்கான விடுமுறைக்கு முந்தைய நாளில் சுமார் ரூ.350 கோடிக்கும், 2024 மக்களவைத் தேர்தல் காலத்தில் ரூ.289 கோடிக்கும் டாஸ்மாக்கில் மது விற்பனை நடந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Summary
Liquor worth RS.400 crore sold in a single day in Tamil Nadu
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விழுப்புரம் மாவட்டத்தில் மே 1-இல் டாஸ்மாக் கடைகள் இயங்காது
புதுவையில் திருவிழா போல் காட்சியளித்த மதுக்கடைகள்! காரணம்?

அரியலூா் மாவட்டத்தில் 4 நாள்களுக்கு டாஸ்மாக் கடைகள் விடுமுறை

சட்டப்பேரவைத் தோ்தல்: மதுக்கடைகளை 4 நாள் மூட உத்தரவு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


