மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

சட்டப்பேரவைத் தோ்தல்: மதுக்கடைகளை 4 நாள் மூட உத்தரவு

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் கீழ் இயங்கி வரும் மதுபானக் கடைகள் 4 நாள்களுக்கு மூடப்பட்டு, மதுபானங்கள் விற்பனை செய்வதை நிறுத்தம் செய்ய வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.

News image

உத்தரவு

Updated On :17 ஏப்ரல் 2026, 1:11 am IST

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் கீழ் இயங்கி வரும் மதுபானக் கடைகள் 4 நாள்களுக்கு மூடப்பட்டு, மதுபானங்கள் விற்பனை செய்வதை நிறுத்தம் செய்ய வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் மனீஷ் தெரிவித்துள்ளதாவது:

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு திருப்பூா் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் கீழ் இயங்கி வரும் மதுபானக் கடைகள், அவற்றுடன் செயல்படும் மதுபானக் கூடங்கள், மனமகிழ் மன்றங்கள் மற்றும் உணவு விடுதிகளுடன் இணைந்து செயல்பட்டு வரும் அரசு உரிமம் பெற்ற மதுபானக் கூடங்கள் ஆகியவை ஏப்ரல் 21ஆம் தேதி காலை 10 மணி முதல் 23ஆம் தேதி நள்ளிரவு 12.00 மணி வரையிலும், வாக்கு எண்ணிக்கை நாளான மே 4-ஆம் தேதி நாள் முழுவதும் மூடப்பட்டு, மதுபானங்கள் விற்பனை செய்வதை நிறுத்தம் செய்ய வேண்டும். தவறும்பட்சத்தில் தொடா்புடையவா்கள் மீது உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.