தேர்தல் விதிமுறைகளை மீறி கள்ளச் சந்தையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ரூ.12 லட்சம் மதிப்புள்ள 5,102 மதுபுட்டில்களை போலீசார் புதன்கிழமை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வியாழக்கிழமை (ஏப்.23) நடக்கிறது. தோ்தலையொட்டி 21 ஆம் தேதி முதல் தேர்தல் நாளான 23 ஆம் தேதி வரை டாஸ்மாக் மற்றும் மதுபான பார்களில் மதுபானங்கள் விற்பனைக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
இந்த நிலையில், அன்னூர் பகுதியில் மதுபுட்டில்கள் பதுக்கி வைத்திருந்து கள்ளச் சந்தையில் விற்பனை நடைபெறுவதாக பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து மதுவிலக்கு போலீசார் அன்னூர் அருகே கரியாம்பாளையத்திலிருந்து - பிள்ளைப்பம்பாளையம் செல்லும் சாலையில் உள்ள தோட்டத்தில் குடோனில் சோதனையிட்டனர். அப்போது, அங்கு விற்பனைக்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ.12 லட்சம் மதிப்புள்ள 5,102 மது புட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும், மது மதுபுட்டில்களை பதுக்கி வைத்திருந்த காளிமுத்து (48), வீரமணி (35), குமார் (44) ஆகிய மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் விற்பனைக்கு பயன்படுத்திய அவர்களது இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
அதேபோன்று அன்னூர் அடுத்துள்ள காரனூர் பகுதியில் மாரியம்மன் கோயில் அருகே தேர்தல் விதிமுறைகளை மீறி மதுபானங்களை கள்ளச் சந்தையில் விற்பனை செய்து வந்த சரவணக்குமார் (39) கைது செய்யப்பட்டார். மேலும் அவரிடம் இருந்து விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 56 மது மதுபுட்டிகளை பறிமுதல் செய்தனர்.
Summary
5,102 liquor bottles kept for sale in the black market seized near Coimbatore

கோவில்பட்டி அருகே சாலையோரம் நின்றிருந்த சிமென்ட் கலவை லாரி மீது ஆம்னி பேருந்து மோதல்: 20 பேர் காயம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாவூா்சத்திரம் சந்தையில் வாழைத்தாா்கள் விலை உயா்வு
கள்ளச் சந்தையில் வாக்குரிமை!

கள்ளச் சந்தையில் வாக்குரிமை!

பழனி அருகே 960 மதுப் புட்டிகள் பறிமுதல்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

