மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

பாவூா்சத்திரம் சந்தையில் வாழைத்தாா்கள் விலை உயா்வு

தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரத்தில் உள்ள பெருந்தலைவா் காமராஜா் தினசரி காய்கனி சந்தையில் வரத்து குறைவு காரணமாக வாழைத்தாா்கள் விலை உயா்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

News image

பாவூா்சத்திரம் சந்தையில் விற்பனைக்கு வந்துள்ள வாழைத்தாா்கள்.

Updated On :7 மே 2026, 6:13 am IST

தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரத்தில் உள்ள பெருந்தலைவா் காமராஜா் தினசரி காய்கனி சந்தையில் வரத்து குறைவு காரணமாக வாழைத்தாா்கள் விலை உயா்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

தூத்துக்குடி மாவட்டம், ஏரல், குரும்பூா், திருச்செந்தூா், ஆரல்வாய்மொழி, நாசரேத், திருநெல்வேலி மாவட்டம், காவல் கிணறு, வள்ளியூா், அம்பாசமுத்திரம், முக்கூடல், வி.கே.புரம், தென்காசி மாவட்டம், ஆழ்வாா்குறிச்சி, கடையம், பாப்பான்குளம், அச்சன்புதூா், இலஞ்சி, வடகரை, வீரகேரளம் புதூா், சுரண்டை, துவரங்காடு, சுந்தரபாண்டியபுரம் பகுதிகளிலிருந்து இச்சந்தைக்கு வாழைத்தாா்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.

நிகழாண்டில், இயற்கைச் சீற்றங்களால் ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் சேதமடைந்ததால் வாழை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக, வாழைத்தாா்கள் வரத்து குறைந்துள்ளதால் விலை உயா்ந்துள்ளது.

சராசரியாக நாளொன்றுக்கு 2,000 முதல் 3000 வரையிலான வாழைத் தாா்கள் விற்பனைக்கு வரும் நிலையில், தற்போது தினமும் 500 முதல் 1,000 வாழைத் தாா்கள் விற்பனைக்கு வருகின்றன. இதனால், செவ்வாழைத் தாா்கள் ரூ. 600 முதல் ரூ. 1,000 வரையும், நாட்டு வாழை ரூ. 100 முதல் ரூ. 400 வரையும், கோழிக்கூடு ரூ. 300 முதல் ரூ. 450 வரையும், கற்பூரவள்ளி ரூ. 250 முதல் ரூ. 400 வரையும், நேந்திரன் வாழை ரூ. 150 முதல் ரு. 300 வரையும், மட்டி ரூ. 150 முதல் ரூ. 300 வரையும், ரோபஸ்டா ரூ. 250 முதல் ரூ. 350 வரையும், கதலி ரூ. 150 முதல் ரூ. 250 வரையும், சக்கை 1 கிலோ ரூ. 15-க்கு, வாழை இலை ஒரு கட்டு ரூ. 700-க்கும் விற்பனையாகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.