பாஜக வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜனுக்கு ஆதரவு தெரிவித்து மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா, சென்னை மயிலாப்பூர் பேரவைத் தொகுதியில் இன்று(ஏப். 19) சாலை வலம் மேற்கொள்ளவுள்ளார்.
அதேபோல, திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் இன்று மாலை, தியாகராய நகர், ஆயிரம் விளக்கு பகுதியில் இருந்து அண்ணா அறிவாலயம் வரை சாலை வலம் மேற்கொள்கிறார்.
மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஈரோட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 19) வருகிறார். மொடக்குறிச்சி பாஜக வேட்பாளர் எஸ்.கிருத்திகாவை ஆதரித்து நடைபெறும் சாலைப் பேரணியில் அமித் ஷா கலந்து கொள்கிறார்.
இதற்காக மத்திய அமைச்சா் அமித் ஷா ஈரோடு மாவட்டம், சிவகிரியில் இருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தாமரைபாளையம் பகுதியில் உள்ள தாமரை மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி திடலுக்கு காலை 9.30 மணிக்கு ஹெலிகாப்டரில் வந்து இறங்குகிறார். அங்கிருந்து கார் மூலமாக காலை 10 மணிக்கு சிவகிரி வருகிறார்.
சிவகிரி அரசு மருத்துவமனை அருகில் இருந்து அமித் ஷா சாலை வலம் நிகழ்வைத் தொடங்குகிறார். அங்கிருந்து சிவகிரி பழைய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள தீரன் சின்னமலை சிலை வரை 850 மீட்டர் தொலைவு நடைபெறவுள்ள சாலை வல நிகழ்ச்சியில் அமித் ஷா கலந்துகொள்கிறார். நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு அங்கிருந்து சென்னை புறப்படுகிறார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், பர்கூர் உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை பிரசாரம் மேற்கொள்கிறார்.
இதனைத் தொடர்ந்து சென்னை வரும் முதல்வர், சாலை வல நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
Summary
Union Home Minister Amit Shah is set to conduct a roadshow today (April 19) in the Mylapore Assembly constituency in Chennai, expressing his support for BJP candidate Tamilisai Soundararajan.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த ரிஷப் ஷெட்டி!
மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷா

வாக்களித்தார் மத்திய அமைச்சர் அமித் ஷா!
மறுவரையறை மசோதா தோல்வி கொண்டாட்டங்கள் கண்டிக்கத்தக்கவை: அமித் ஷா
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


