குஜராத்தில் நடைபெற்றுவரும் உள்ளாட்சித் தேர்தலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வாக்களித்தார்.
முன்னதாக, குஜராத்தில் மாநிலம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் ஏப்ரல் 26 ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் எனவும், அதே வேளையில் வாக்கு எண்ணிக்கை ஏப்ரல் 28 ஆம் தேதி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டது. அதேபோல, உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் திட்டமிட்டபடி இன்று தொடங்கியது.
இதனைத் தொடர்ந்து, குஜராத்தில் உள்ள 15 மாநகராட்சிகள், 84 நகராட்சிகள், 34 மாவட்ட ஊராட்சிகள், 260 தாலுகா பஞ்சாயத்துகள் மற்றும் 11 நகராட்சிகளில் காலியாக உள்ள 13 இடங்களுக்கு இடைத்தேர்தலும் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், காந்திநகரில் உள்ள வாக்குச்சாவடியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது வாக்கைச் செலுத்தினார். அவருடன் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) தலைவர் ஜெய் ஷாவும் தனது வாக்கைச் செலுத்தினார்.
குஜராத் உள்ளாட்சித் தேர்தலின் ஒரு பகுதியாக நகர்ப்புற மற்றும் மாவட்ட அளவிலான அமைப்புகளுக்கு மட்டுமே இன்று வாக்குப்பதிவு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
Summary
Union Home Minister Amit Shah cast his vote in the ongoing local body elections in Gujarat.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த ரிஷப் ஷெட்டி!
மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷா

சென்னையில் அமித் ஷா, ஸ்டாலின் சாலை வலம்!
மறுவரையறை மசோதா தோல்வி கொண்டாட்டங்கள் கண்டிக்கத்தக்கவை: அமித் ஷா
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு


