கொல்கத்தாவில் மத்திய அமைச்சர் அமித் ஷா சாலைவலம் மேற்கொண்டு இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
மேற்குவங்கத்தில் முதல்கட்டத் தேர்தல் கடந்த ஏப். 23 ஆம் தேதி நடந்து முடிந்த நிலையில் மீதியுள்ள 142 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்டத் தேர்தல் ஏப். 29 ஆம் தேதி நடைபெற உள்ளது. மே 4 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன.
அதன்படி மேற்குவங்கத்தில் இரண்டாம் கட்டத் தேர்தலுக்கான பிரசாரம் இன்றுடன் நிறைவு பெறும் நிலையில் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பிரதமர் மோடி பராக்பூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசி வரும் நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கொல்கத்தாவில் பெஹாலா பச்சிம் தொகுதி பாஜக வேட்பாளர் இந்திரனில் கானை ஆதரித்து சாலைவலம் மேற்கொண்டு வருகிறார். இதில் திரளானோர் கலந்துகொண்டுள்ளனர்.
அப்போது ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில்,
"மேற்குவங்கத்தில் பாரதிய ஜனதா கட்சி நிச்சயமாக ஆட்சியமைக்கப் போகிறது.
பயப்படுவதற்கு என்ன இருக்கிறது? பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும். இந்தியாவில் நான்கு திருமணங்கள் நடைபெறக்கூடாது என்பதே எங்களின் கொள்கையாகும். இதுவரை, வன்முறை தொடர்பான பெரிய சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை. ஒரு உயிரிழப்புகூட ஏற்படவில்லை. தேர்தல்கள் அமைதியான முறையில் நடைபெற்று வருகின்றன" என்று தெரிவித்தார்.
Summary
Union Minister Amit Shah says, BJP is definitely going to form the government
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த ரிஷப் ஷெட்டி!

வாக்களித்தார் மத்திய அமைச்சர் அமித் ஷா!

மே 5, மேற்கு வங்கத்தில் பாஜக முதல்வர் பதவியேற்பார் : அமித் ஷா உறுதி

மேற்கு வங்கத்தில் 15 நாள்கள் முகாமிடும் அமித் ஷா! ஆட்சியைப் பிடிக்க பாஜக தீவிரம்!
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
