தவெக தலைவர் விஜய் பிரசாரத்துக்கு போதிய பாதுகாப்பு வழங்கக்கோரி தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்-யிடம் தவெக நிர்வாகிகள் மனு அளித்துள்ளனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில பொதுச் செயலர் என். ஆனந்த் மற்றும் தேர்தல் மேலாண்மை பொதுச் செயலர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்னாயக்கை நேரடியாக சந்தித்து மனு அளித்தனர்.
தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த காவல் துறையும் இடமாற்றம் செய்யப்பட வேண்டும் என்பது குறித்தும், நேற்று அயனாவரம் தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் திமுகவினர் இடையூறு செய்தது குறித்தும் புகார் மனு அளித்தனர்.
மேலும், தமிழக வெற்றிக் கழகம் பிரசாரம் மேற்கொள்ளும்போது காவல்துறை முறையான பாதுகாப்புகளை வழங்க வேண்டும் எனவும் புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த தவெக நிர்வாகிகள் கூறுகையில், ”கொளத்தூர் தொகுதியில் விஜய் பிரசாரத்துக்கு போதிய பாதுகாப்பை தமிழ்நாடு காவல் துறை வழங்கவில்லை. முதல்வர் ஸ்டாலினுக்கு 2000 காவலர்கள் பாதுகாப்புக்குச் செல்கிறார்கள்.
தவெக தலைவர் விஜய்யின் தேர்தல் பிரசாரத்துக்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரி தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது” என்றனர்.
Summary
TVK functionaries have submitted a petition to Tamil Nadu Chief Electoral Officer Archana Patnaik, requesting adequate security cover for TVK leader Vijay's election campaign.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வாக்கு எண்ணும் மையங்களிலிருந்து ஒரு கி.மீ. தொலைவுக்கு கட்சியினரை அனுமதிக்கக் கூடாது: தலைமைத் தோ்தல் அதிகாரியிடம் தவெக மனு

வாக்கு சதவிகிதம் அதிகரிப்பா? தலைமைத் தேர்தல் ஆணையரின் நகைச்சுவை: திமுக
விஜய் பிரசாரத்திற்கு போதிய பாதுகாப்பு இல்லை! தேர்தல் அதிகாரியிடம் தவெக புகார்!!

தலைமை தேர்தல் அதிகாரியிடம் விஜய் புகார்! | Vijay | TVK
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


