தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடுஅமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

வாக்கு சதவிகிதம் அதிகரிப்பா? தலைமைத் தேர்தல் ஆணையரின் நகைச்சுவை: திமுக

தமிழகத்தில் வாக்கு சதவிகித அதிகரிப்பு தலைமைத் தேர்தல் ஆணையர்தான் காரணம் என்பது நகைச்சுவையாக இருப்பதாக திமுக நிர்வாகி சரவணா அண்ணாதுரை பேச்சு

News image

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் - கோப்புப் படம்

Updated On :24 ஏப்ரல் 2026, 7:50 am IST

தமிழகத்தில் வாக்கு சதவிகித அதிகரிப்பு தலைமைத் தேர்தல் ஆணையர்தான் காரணம் என்பது நகைச்சுவையாக இருப்பதாக திமுக நிர்வாகி சரவணா அண்ணாதுரை பேசியுள்ளார்.

சென்னையில் செய்தியாளருடன் திமுக செய்தித் தொடர்பாளர் சரவணா அண்ணாதுரை பேசுகையில், வாக்காளர்கள் குறைக்கப்பட்டதால், வாக்கு சதவிகிதம் அதிகரித்துள்ளது. இது ஒரு சாதாரண அடிப்படைக் கணக்குதான்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் மூலம் வாக்காளர்களின் எண்ணிக்கையை நீங்கள் (தேர்தல் ஆணையம்) குறைத்தீர்கள். ஆனால், இப்போது, இந்த வாக்கு சதவிகிதத்தைப் பாருங்கள் என்று ஆச்சரியமாகக் கூறுகிறீர்கள்.

சிலர் கூறுவதுபோல, இது முன்னெப்போதும் இல்லாத ஒன்று அல்ல.

ஒவ்வொரு தேர்தலின்போது 40 லட்சம் முதல் 50 லட்சம் வரையில் வாக்காளர்கள் சேர்க்கப்படுகின்றனர். இது 2001 தேர்தலிலிருந்தே நடைபெற்று வருகிறது.

2001 தேர்தலில் 4.74 கோடி வாக்காளர்களில் 2.80 கோடி பேர் வாக்களித்தனர். 2006-ல் 3.28 கோடியும், 2011-ல் 3.68 கோடியும், 2016-ல் 4.32 கோடியும், 2021-ல் 4.58 கோடி வாக்காளர்களும் வாக்களித்தனர்.

ஆனால், இந்த வாக்கு சதவிகித அதிகரிப்புக்கு தலைமைத் தேர்தல் ஆணையர்தான் காரணம் என அவரே பொறுப்பேற்றுக் கொள்ள முயற்சிக்கிறார். இதுதான் மிகப்பெரிய நகைச்சுவை என்று தெரிவித்தார்.

தமிழகத்தில் சட்டப்பேரவைக்கான தேர்தல் வியாழக்கிழமையில் (ஏப். 23) ஒரே கட்டமாக காலை 7 மணிக்குத் தொடங்கி, மாலை 6 மணியளவில் முடிவடைந்தது. இந்தத் தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத அளவில் 84.69 சதவிகித வாக்குகள் பதிவானதாகவும் தேர்தல் ஆணையம் கூறியது.

Summary

The Chief Election Commissioner is trying to take credit for Higher Vote Percentage, which is the biggest joke: DMK Leader Saravana Annadurai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.