மேற்கு வங்கத்தில் வாக்கு எண்ணிக்கைக்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிக்கப்பட்டு, தயார்நிலையில் உள்ளதாக அந்த மாநிலத்தின் தலைமைத் தேர்தல் அதிகாரி மனோஜ் குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்துக்கான சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடத்தி முடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் சில தொகுதிகளில் முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் வந்ததன் அடிப்படையில் 15 வாக்குச்சாவடிகளில் மட்டும் மறுவாக்குப்பதிவு சனிக்கிழமை (மே 2) நடத்தப்பட்டது.
ஃபால்டா தொகுதியில் உள்ள 285 வாக்குச்சாவடிகளிலும் வரும் மே 21 ஆம் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதனிடையே, முழுமையாக வாக்குப்பதிவு நடந்து முடிந்த தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் திங்கள்கிழமை (மே 4) நடைபெற உள்ளது.
இதுகுறித்து மேற்கு வங்கத்தின் தலைமைத் தேர்தல் அதிகாரி மனோஜ் குமார் அகர்வால் பேசியிருப்பதாவது:
“இந்தியத் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள், சட்டம் மற்றும் அறிவிப்புகளின்படி, வாக்கு எண்ணிக்கைக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்து முடிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை பணிகளுக்காக நியமிக்கப்பட்ட அனைத்து அலுவலர்களும், மத்திய துணை ராணுவப் படையினரும் மற்றும் நமது கணிகாணிப்பாளர்களும் தயார் நிலையில் உள்ளனர்.
உள் அடுக்கில் மத்திய ஆயுதக் காவல் படை, அதனைத் தொடர்ந்து உள்ளூர் காவல்துறை, பின்னர் மாநில காவல்துறை என மூன்றடுக்கு பாதுகாப்பு அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சட்டவிரோதக் கூட்டங்களைக் கட்டுப்படுத்த பிஎன்என்எஸ்-இன் பிரிவு 163 என்னும் சட்டம் அமலில் உள்ளது.
மேலும், சட்டத்துக்கு அப்பாற்பட்டவர் எவரும் இல்லை. பார்வையாளர்கள் உள்பட அலட்சியமான அதிகாரிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
Summary
Manoj Kumar Agarwal, the Chief Electoral Officer of West Bengal, has stated that all arrangements for the vote counting in the state have been completed and are in a state of readiness.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
வாக்கு எண்ணிக்கையை நிறுத்த பாஜக முயற்சி! தேர்தல் ஆணையத்துக்கு திமுக கடிதம்

வாக்கு எண்ணிக்கை: தோ்தல் அலுவலா்களுக்கு பயிற்சி

வாக்கு சதவிகிதம் அதிகரிப்பா? தலைமைத் தேர்தல் ஆணையரின் நகைச்சுவை: திமுக

வாக்காளர் செல்போன்களை வைக்க சிறப்பு வசதி: தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி!
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை


