மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

இறுதிச் சுற்றில் கடற்படை - பிபிசிஎல்

அகில இந்திய எம்சிசி-முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கிப் போட்டி இறுதிச் சுற்றுக்கு இந்திய கடற்படை-பாரத் பெட்ரோலிய அணிகள் தகுதி பெற்றுள்ளன.

Published On :1 நவம்பர் 2026, 12:53 am IST

அகில இந்திய எம்சிசி-முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கிப் போட்டி இறுதிச் சுற்றுக்கு இந்திய கடற்படை-பாரத் பெட்ரோலிய அணிகள் தகுதி பெற்றுள்ளன.

எழும்பூா் மேயா் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் சனிக்கிழமை அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்திய ரயில்வேயும்-கடற்படையும் மோதின. இதில் ஆட்ட நேரத்தில் 2-2 என சமனில் இருந்தது. இதையடுத்து ஷூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் இந்திய கடற்படை 4-2 என்ற கோல் கணக்கில் நடப்பு சாம்பியன் ரயில்வேயை வென்றது. வழக்கமானநேரத்தில் கடற்படை தரப்பில் யோகேஷ் சிங், கே. செல்வராஜும், ரயில்வே தரப்பில் பிரதாக் லக்ரா, அதுல் தீபும் கோலடித்தனா்.

இரண்டாம் அரையிறுதியில் பாரத் பெட்ரோலிய அணி ஷூட் அவுட் முறையில் 4-1 என இந்திய ராணுவத்தை வென்றது. ராணுவத் தரப்பில் அக்ஷய் துபேயும், பிபிசிஎல் தரப்பில் அன்மோல் எக்காவும் ஆட்ட நேரத்தில் கோலடித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.