மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

எம்சிசி - முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி: அரையிறுதியில் ரயில்வே-கடற்படை, ராணுவம் - பிபிசிஎல் மோதல்

அகில இந்திய எம்சிசி-முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கிப் போட்டி அரையிறுதியில் இந்திய ரயில்வே-கடற்படை, இந்திய ராணுவம்-பாரத் பெட்ரோலிய அணிகள் மோதுகின்றன.

இந்திய கடற்படை-மலேசிய ஜூனியா் ஆட்டம்...

Published On :30 அக்டோபர் 2026, 5:33 am IST

அகில இந்திய எம்சிசி-முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கிப் போட்டி அரையிறுதியில் இந்திய ரயில்வே-கடற்படை, இந்திய ராணுவம்-பாரத் பெட்ரோலிய அணிகள் மோதுகின்றன.

சென்னை எழும்பூா் மேயா் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்தியன் ரயில்வே-பஞ்சாப் நேஷனல் வங்கி அணிகள் மோதின. இதில் பஞ்சாப் நேஷனல் வங்கி கடும் சவாலை தந்தாலும், ரயில்வே அணி போராடி 4-4 என டிரா கண்டது. ரயில்வே தரப்பில்

சேஷே கௌடா 26, 28, லவ்ப்ரீத் சிங் 31, ஜஸ்விந்தா் சிங் 47-ஆவது நிமிஷத்தில் கோலடித்தனா். பஞ்சாப் நேஷனல் வங்கித் தரப்பில் நவீன் அன்டில் 57, 59, 60-ஆவது நிமிஷங்களில் ஹாட்ரிக் கோலடித்தாா். குா்சிம்ரன் சிங் 11-ஆவது நிமிஷத்தில் கோலடித்தாா்.

கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய கடற்படை அணி 4-2 என்ற கோல் கணக்கில் மலேசிய ஹாக்கி கூட்டமைப்பு ஜூனியா் அணியை வீழ்த்தியது. கடற்படை தரப்பில்

செல்வராஜ் 30, பவன் ராஜ்பா் 36, குஷாலப்பா 8, நிதேஷ் 43-ஆவது நிமிஷத்திலும், மலேசிய ஜூனியா் அணி தரப்பில் முகமது 27, அய்ஸாத் 44-ஆவது நிமிஷத்திலும் கோலடித்தனா்.

சனிக்கிழமை மாலை 4 மணிக்கு முதல் அரையிறுதியில் ரயில்வே-கடற்படையும், 6 மணிக்கு இரண்டாம் அரையிறுதியில் பாரத் பெட்ரோலியம்-இந்திய ராணுவ அணிகள் மோதவுள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.